திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வன்முறைக்கு அச்சாரம் போடும் 4 ரத்த களரியான இயக்குனர்கள்.. லோகேஷை மிஞ்சியது இவர்தான்

Violence based tamil cinemas and their directors: “வெல்ல தானே வீரம்! கொல்வதற்கு இல்லை!” என்று வீரமே வாகை சூடிய இந்த மண்ணில் வன்முறையை விதைத்து வளரும் இளம் தலைமுறைகளை பந்தாடி வன்முறைக்கு அச்சாரம் போட்டு ரத்தம் தெறிக்க வைக்கும் இயக்குனர்களை பற்றி பார்ப்போம்.

ஃபீல் குட் மூவிஸ்சை விட அதிரடி ஆக்சன் திரைப்படங்களுக்கு தான் வசூல் அதிகம் குவிகிறது.  நீங்க எடுப்பதால் நாங்க பார்க்கிறோம் என்று இளம் தலைமுறையினறும், நீங்கள் பார்ப்பதால் நாங்கள் எடுக்கிறோம் என்று இயக்குனர்களும் கூறி வருவது இன்றைய சமூகத்தின் அவல நிலை.

குழந்தைகள் பெற்றோர்களுடன் பார்க்கலாம் என்று யூ ஏ சர்டிபிகேட் கொடுத்த படங்கள் பெரும்பாலும் வன்முறை மற்றும் ஆபாசங்களோடு வருவது கொடூரத்தின் உச்சம். “வயலன்ஸ் லைக் மீ” என்று பிரசாந்த் நீல் இயக்கிய கே ஜி எஃப் படத்தை பார்த்து சிறுவன் ஒருவன் தொடர்ந்து அதிக அளவு சிகரெட் புகைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறானாம். நாடு எங்கே செல்கிறது.

Also read: நெல்சன், லோகேஷ் கதையெல்லாம் கோடு மட்டும் தான்.. 67 வயதிலும் டஃப் கொடுத்த மணிரத்தினம்

நெல்சன் இயக்கிய பீஸ்ட் மற்றும் ஜெயிலர் இவை இரண்டும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் தலைவர்களை வன்முறைக்கு எதிராக போராட வைத்தார். ஆனால் இளம் தலைமுறைகளின் மனதில் தலைவர்களின் போராட்டம் தெரியவில்லை. ஒரே அடிதான் அடுத்த அடிக்கு அவன் எந்திரிக்க கூடாது என்கிற வன்முறையே களை கட்டியது.

ரத்தம் சொட்ட சொட்ட கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என தொடர்ந்து ஆக்சன் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படங்களின் மூலம் டாப்ரேட்டட்  இயக்குனர் ஆனார். பிளேடு, கத்தி, துப்பாக்கி போக நூலை கூட ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்த செய்யும் தந்திரமே இளைஞர்களை கொண்டாட வைத்தது.

arun matheswaran

இந்த லோகேசை மிஞ்சி விடுவார் போல சாணி காயிதம் மற்றும் கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தின் போஸ்டரிலேயே பிணக்குவியலை காட்டி வெறிகொண்டு வருவதாக ஹீரோயிசத்தை முன்னிறுத்தி உள்ளார். கதையை மிஞ்சி ரத்தத்தில் மிதக்க வைக்கும் இந்த சாதுவான இயக்குனர் “மரியாதை தான் சுதந்திரம்” என டேக்லைன்னோடு வரும் கேப்டன் மில்லரின் போராட்டம் இளைஞர்களை எதிர்மறையாக அழைத்துக் போகாமல் இருந்தால் சரிதான்

அதிரடி ஆக்சன் களோடு வன்முறையை தெறிக்க விட்டு ரத்த களரிகளுடன் வரும் படங்கள் எதிர்மறையாக சேர்ந்து இளம் தலைமுறையினருக்கு தப்பான முன்னுதாரணமாகவே அமைந்து விடுகின்றன. சிறு ஏமாற்றத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் வன்முறையின் மூலம் சாதிக்கலாம் என்ற உந்துதலை அவர்களிடம் வளர்த்து விடும் இன்றைய சினிமாவின் போக்கை மாற்றி “வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை” என்றால் நலமே.

Also read: பவுடர், ரத்தக்களரி இல்லாத சினிமா.. லோகேஷ், நெல்சனை குத்தி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்

Trending News