திரிஷாவுக்கு கல்யாணமா.! பட்டுப்புடவை, மல்லிப்பூ என கலக்கலாக வெளியான போட்டோ

41 வயதான நிலையிலும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார் திரிஷா. அதேபோல் இளம் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு கூடுதல் அழகுடன் இருக்கிறார்.

இதுவே அவரை இன்னும் முன்னணி அந்தஸ்தில் வைத்துள்ளது. தற்போது குட் பேட் அக்லி, தக்லைஃப், சூர்யா 45 உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு என ரொம்ப பிசியாக இருக்கிறார். இருந்தாலும் கூட சோசியல் மீடியாவிலும் அவர் ஆக்டிவாக உள்ளார்.

திரிஷாவுக்கு கல்யாணமா

எப்போதுமே நண்பர்களுடன் வெளிநாடு செல்லும் போட்டோக்களை தான் அவர் அதிகம் பதிவிடுவார். அதேபோல் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், போட்டோ சூட் புகைப்படங்களும் வைரலாகும்.

ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ வேற லெவலில் ட்ரண்ட் ஆகி வருகிறது. என்னவென்றால் பச்சை நிறத்தில் பட்டுப்புடவை, தலையில் மல்லிப்பூ, மூக்குத்தி நகை என த்ரிஷாவின் போட்டோ வெளியாகியுள்ளது.

அதேபோல் love always wins என்ற கேப்ஷனையும் அவர் போட்டு உள்ளார். இதைப் பார்த்த பலருக்கும் திரிஷா கல்யாணத்திற்கு தயாராகி விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதையே அவருடைய ரசிகர்களும் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். ஒரு வேளை நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என்ற யூகங்களும் கிளம்பியுள்ளது.

இது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோவாக கூட இருக்கலாம். ஆனாலும் திரிஷாவுக்கு கல்யாணம் என்ற செய்தி தற்போது தீயாக பரவி வருகிறது. இதற்கு அவரே விளக்கம் கொடுத்தால் தான் உண்டு.

Leave a Comment