ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின் உச்சியில் இருக்கும் இவர் கிரிக்கெட்டை தாண்டி பல பிசினஸையும் செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது சினிமா துறையிலும் காலடி வைக்க இருக்கிறார். பொதுவாகவே கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிது கிடையாது. சமீபத்தில் கூட ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரை தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் ரோல் மாடலாக இருக்கும் தோனியும் சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.

Also read: வணங்கானுக்கு கொடுத்த டாட்டா, வாடிவாசல் இழுப்பறி.. இப்போது சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்திற்கு தயாராகும் சூர்யா

அதாவது இவர் தற்போது ஹரிஷ் கல்யாண், இவானா ஜோடியை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். எல்.ஜி.எம் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் விமரிசையாக நடைபெற்றது. இது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் தற்போது சச்சினும் சினிமா பக்கம் திரும்பி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சூர்யாவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சின்

sachin-surya
sachin-surya

அது மட்டுமல்லாமல் இதற்காக அவர் தற்போது நடிகர் சூர்யாவுடன் ஒரு சந்திப்பையும் நடத்தி இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சந்திப்பு எதார்த்தமாக நிகழ்ந்தது என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் படம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை தான் நடந்திருக்கிறது.

Also read: சூர்யா போல் தேவ், ஜோதிகா போல் தியா.. நக்மாவுடன் திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்கள்

தற்போது சூர்யா 42, வாடிவாசல் என அடுத்தடுத்த திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் சூர்யா விரைவில் சச்சின் உடன் இணைய இருக்கிறாராம். அதற்கான முன்னோட்டமாக நடந்த இந்த சந்திப்பு சச்சினின் அடுத்த அவதாரத்திற்கான அஸ்திவாரமாகவும் மாறி இருக்கிறது. அதிலும் தேசிய விருது நடிகருடன் அவர் கைகோர்த்து இருப்பது பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

தற்போது வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சினிமா உலகின் கடவுளும், கிரிக்கெட் உலகின் கடவுளும் ஒன்றாக இணைந்த தருணம் என இந்த சந்திப்பை குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Also read: தேசிய விருது வாங்கியதில் இருந்தே நேரம் சரியில்லை.. சூர்யாவின் வாழ்க்கையில் விளையாடும் விதி

Trending News