
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிவு பெற்று, இப்பொழுது 18 வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியன் பிரீமியர் லீக்கில் விராட் கோலி சம்பாதித்த மொத்த தொகைகள் மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது சம்பளத்தை இதில் பார்க்கலாம்.
2008 முதல் 2010: ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடங்கிய போது விராட் கோலிக்கு வெறும் 12 லட்சம் மட்டுமே சம்பளம். அப்பொழுது அவர் இந்திய அணியில் பி கிரேடு வீரராக வலம் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுதே அவர் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார்.
2011 முதல் 2013: இந்த காலகட்டத்தில் ஓரளவு சொதப்பினாலும் பின்னர் தன்னை ஐபிஎல் போட்டிகளிலும் ரன் மிஷனாக வெளிக்காட்ட ஆரம்பித்தார். அப்பொழுது அவரது சம்பளம் 8. 26 கோடிகளாக அதிகரித்தது. பெங்களூர் அணி அவரை விடுவிக்காமல் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
2014 முதல் 2017: இந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் விளையாடுவதற்கு விராட் கோலி வாங்கிய சம்பளம் 12.5 கோடிகள். வெளிநாட்டு வீரர்களை காட்டிலும் உள்ளூர் அதிக விலை போகும் வீரராக கோலி வலம் வந்து கொண்டிருந்தார்.
2018 முதல் 2024: விராட் கோலியின் சம்பளம் இதில் 17 கோடிகளாக மாறியது. இதற்கு பின்னர் கோப்பையை வெல்லாத கேப்டன் என அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்தார் கோலி. அதனால் இவரது சம்பளத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தது 15 கோடிகள் வரை குறைந்தும் வாங்கினார்.
2025: நடப்பு தொடரில் விராட் கோலி சம்பளம் 21 கோடிகள் இது முன்பை காட்டிலும் 40 சதவீதம் அதிகம். இந்த 18 சீசன்களையும் சேர்த்து விராட் கோலி ஐபிஎல் தொடரில் சம்பாதித்தது 179.70 கோடிகள். விராட் கோலியை பொறுத்தவரை இது ஐந்து வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி சம்பாதிக்கும் தொகை.