வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

சேவாக்குக்காக 4 நாள் லீவு விட்ட பங்களாதேஷ்.. ஆறு பவுலர்களையும் பலி தீர்த்த விரேந்தர்

2007 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ராகுல் ட்ராவிட் தலைமையில் கலந்து கொண்டது. ராகுல் டிராவிட் கேரியரில் இது அவருக்கு ஒரு கரும்புள்ளி தொடராக அமைந்தது. அந்த அளவிற்கு மோசமாய் இந்திய அணி பெர்பார்ம் பண்ணியது.

இந்தத் உலகக் கோப்பை தொடர் தோல்வியால் ஒவ்வொரு இந்திய வீரரின் வீடுகளுக்கும் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டார்கள். அந்த அளவிற்கு இருந்தது ரசிகர்களின் கோபம். கத்துக்குட்டி அணியான பங்களாதேஷிடம் தோற்றது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெறியாக்கியது.

அந்தத் தொடரில் பங்களாதேஷ் அணியுடன் தோற்றது தான் இந்தியா சூப்பர் 6 போட்டிகளுக்குள் நுழையாமல் வெளியேற காரணமாக அமைந்தது. வெறும் 191 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்திய அணி. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக போட்டியை வென்றது.

ஆறு பவுலர்களையும் பலி தீர்த்த விரேந்தர்

அடுத்து வந்த 2011 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியை பழிவாங்கும் விதமாக விளையாடுவோம் என வெளிப்படையாக சேவாக் கூறியிருந்தார். அவர்களால் இந்தியாவை ஜெயிக்க முடியாது என கூறியது ஒட்டுமொத்த பங்களாதேஷ் வீரர்களையும், நாட்டினரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஜெயிக்கிறமோ, தோக்குறோமோ விரேந்திர சேவாக்கை மொக்கை பண்ணுவோம் என்ற ரீதியில் 2011 உலகக் கோப்பை முதல் போட்டியில் களத்தில் இறங்கினார்கள் பங்களாதேஷ் வீரர்கள். இந்த போட்டிக்காக போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு நாட்கள் அந்த நாட்டு அரசாங்கம் விடுமுறை அறிவித்தது.

பங்களாதேஷ் மிராப்பூரில் போட்டி நடைபெற்றது. பங்களாதேஷ் தரப்பில் வீசிய 6 பவுலரையும் விட்டுவைக்காத சேவாக் துவம்சம் பண்ணினார் 140 பந்துகளுக்கு 175 ரன்கள் குவித்து இந்தியா 370 ரன்கள் அடிக்க வழி செய்தார். ஒட்டுமொத்த பங்களாதேஷ் அணியும் 2007 தோல்விக்கு பலி வாங்கினார்.

- Advertisement -spot_img

Trending News