ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரு படமாவது சக்சஸ் கொடுங்க.. முரட்டு இயக்குனரிடம் தஞ்சமடைந்த விஷால்!

விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அந்த த்ரில்லர் திரைப்படம். இந்த படத்தில் வினய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். முரட்டு இயக்குனரை வைத்து இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது.

இந்த துப்பறிவாளன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அதே குழுவினரை வைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தையும் மிஷ்கின் கதை எழுதி இயக்கினார். இதில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, கௌதமி, நாசர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரிய சண்டையாக மாறியது. இதனால் மிஷ்கின் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியாது என்று பாதியில் வெளியேறினார்.

அதன்பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டபடி திட்டி திரையுலகையே அதிரச் செய்தனர். மேலும் இந்த படத்தை யார் இயக்குவது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் இந்த படத்தை தயாரித்து, நடித்து கொண்டிருந்த விஷாலே இயக்குனராக முடிவெடுத்தார்.

சமீபத்தில் கூட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைப்படம் வெளியாகி விடும் என்று நினைத்த வேளையில் தற்போது படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

ஏற்கனவே மிஷ்கின் படத்தின் பாதி வேலைகளை முடித்து விட்டதாகவும், தற்போது மீதியிருக்கும் கதையை அவரால் மட்டுமே படமாக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலையும் இருந்து வருகிறது. சமீபத்தில் மிஷ்கின் ஒரு பேட்டியில் விஷாலை பற்றி நல்ல விதமாக தெரிவித்திருந்தார்.

அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், முழு படத்தையும் திரையில் காண நான் ஆவலாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதனால் பலரும் அவர் தன்னுடைய கோபத்தை எல்லாம் மறந்து விட்டார் என்று நினைத்தார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது இழுபறியில் இருப்பதால் மிஷ்கின் மீண்டும் விஷால் உடன் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

விஷாலும் கொஞ்சம் இறங்கி வந்தால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே விமர்சன ரீதியாக தோல்விகளை சந்தித்து வரும் விஷாலின் படங்களுக்கு ஒரு சக்சஸ் தற்போது ரொம்ப முக்கியம். ஏற்கனவே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் துப்பறிவாளன் 2 திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்பதே அனைவரின் கருத்து.

Trending News