Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கோடிகளை இழந்து கேலிப் பொருளான விஷால்.. இதான் சொந்த காசில் சூனியம்

கோடிகளை இழந்து கேலிப் பொருளான விஷால்.. இதான் சொந்த காசில் சூனியம்

நடிகர் விஷால் நடிப்பில், அவரே தயாரித்து இயக்கி இந்த ஆண்டு வெளியான ‘மகுடம்’ படம், அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மற்றும் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த இப்படம், வெளியான முதல் […]

நடிகர் விஷால் நடிப்பில், அவரே தயாரித்து இயக்கி இந்த ஆண்டு வெளியான ‘மகுடம்’ படம், அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மற்றும் மிக மோசமான தோல்விப் படமாக அமைந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த இப்படம், வெளியான முதல் நாள் காலை காட்சியிலேயே எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது.

முதல் காட்சி முடிவடைந்த உடனேயே பரவிய எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக, அடுத்தடுத்த காட்சிகளுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை ஒரே அடியாகக் குறைந்துபோனது. இதனால் திரையரங்குகளில் பெரும்பகுதி காலியாகவே காணப்பட்டன, இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

விஷாலின் முந்தைய வெற்றிப் படமான ‘மார்க் ஆண்டனி’யில் தந்தை-மகன் கதாபாத்திரங்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதே வெற்றிகரமான ஃபார்முலாவை மகுடம் படத்திலும் மீண்டும் முயற்சிக்க முயன்றார் விஷால்.

ஆனால், வலுவான கதையோ அல்லது சுவாரசியமான திரைக்கதையோ இல்லாமல்சொதப்பினார். ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் அவசரக்கோலத்தில் எடுக்கப்பட்ட படமாகவே ‘மகுடம்’ அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது.

படம் குறித்த விளம்பரத்திற்காக சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் மற்றும் அவரது செயல்பாடுகள் நெட்டிசன்களால் கடும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகின.

பலர் தங்கள் சொந்த பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்களில் கேலி செய்வது வழக்கம், ஆனால் விஷாலோ தன் சொந்தத் தயாரிப்பில் பல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து தன்னைத் தானே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கிக் கொண்டார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.