திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

சிம்புக்கு நடுவில் கெட்ட நேரம் பிடித்து ஆட்டியது. அதாவது தொடர் தோல்விப் படங்களை கொடுத்ததால் மிக அப்செட்டில் இருந்தார். இதனால் ஒரு நிலையான மன நிலையில் இருக்க முடியாமல் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வராதது, சில சமயங்களில் படப்பிடிப்புக்கு வர மறுப்பது என தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

மேலும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி தனது பெயரையும் கெடுத்துக் கொண்டார். சிம்புவால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள் சிம்பு மீது புகார் கொடுத்தனர். இதனால் சிம்புவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. சிறிது காலம் சினிமாவில் நடிக்க முடியாமல் சிம்பு தவித்து வந்தார்.

Also Read :சிம்பு மார்க்கெட்டை கெடுத்த 5 படங்கள்.. ட்ரைலரை வைத்து ஏமாற்றிய மொக்க படம்

தற்போது சிம்பு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து பழையபடி ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த சூழலில் சிம்புவை போலவே தற்போது படப்பிடிப்புக்கு வராமல் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஷால். இவர் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழு தவித்து வருகிறது.

மேலும் விஷால் தன் சொந்த தயாரிப்பில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்கும் செல்வது இல்லையாம். விஷாலால் பெரிய நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். அதற்கு உங்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ அதை தானே கொடுக்கிறேன் என விஷால் கூறியுள்ளாராம்.

Also Read :உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல விஷால் செய்ததற்கு பிராயச்சித்தமாக தயாரிப்பாளர்களுக்கு தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் சிம்பு இதுபோன்ற தவறு செய்யும் போது அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தனர்.

ஆனால் இப்போது விஷால் மட்டும் நஷ்ட ஈடு கொடுத்தால் போதும் என்பது ஓரவஞ்சனை போல் இருக்கிறது. அதுமட்டுமின்றி எல்லாவற்றிற்கும் மேலாக சிம்புக்கு ரெட் கார்ட் தடை விதிக்கும் போது விஷால் தான் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தற்போது விஷால் மட்டும் தண்டனையிலிருந்து தப்பி உள்ளார்.

Also Read :கமலஹாசன் போல் பல கெட்டப்பில் நடிக்கும் சிம்பு.. ஆஸ்கரை உறுதிசெய்யும் அடுத்த படம்

Trending News