திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனுஷை தூண்டில் போட்டு இழுத்த சிம்பு பட நடிகை.. அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்

நடிகர் தனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் நேரிடையாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதுகிறது. தனுஷுக்கு அடுத்தடுத்து வாத்தி, கேப்டன் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

அப்படியே சிம்புவை பார்த்தால் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் ரிலீஸை தொடர்ந்து இப்போது பத்து தல சூட்டிங்கில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். சிம்புவுக்கு இந்த வருடம் வெந்து தணிந்தது காடு படம் ஒரு மிகப் பெரிய ஹிட் படம். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடித்திருந்தார். இவர் மும்பையை சேர்ந்த நடிகை.

Also Read: இந்த 2 படங்களின் தழுவல் தான் நானே வருவேன்.. இப்பவே வரும் நெகட்டிவ் ரிவ்யூ

சிம்புவும், தனுஷும் சமகாலத்து போட்டியாளர்கள். அவ்வப்போது இவர்களது தொழில் போட்டி குறித்து வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கும். இவர்கள் இருவருக்கும் தான் இந்த போட்டியே தவிர இவர்களுடைய கதாநாயகிகளுக்கு இல்லை. தனுஷுடன் ஒரு நாயகி அறிமுகமாகிறார் என்றால் அவருக்கு அடுத்த படம் சிம்புவின் படமாக தான் இருக்கும். அப்படி தான் சிம்பு பட ஹீரோயின்களுக்கும்.

இப்போது இந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பவர் தான் சித்தி இதானி. இவர் மும்பையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை. இவர் ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு வெந்து தணிந்தது காடு தமிழில் முதல் படம். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.

Also Read: மணிரத்னத்துடன் நேருக்கு நேராக மோதும் செல்வராகவன்.. யாரும் எதிர்பாராத சிக்கலில் மாட்டும் தனுஷ்

இப்போது சித்து இதானி தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் கேப்டன் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் இப்போது சித்தி இலானி ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இயக்குனர் இளன் 2015 ஆம் ஆண்டு கிரகணம் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். நடிகர் ஹரிஷ் கல்யாண்- ரைசாவை வைத்து எடுத்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தனுஷை வைத்து இயக்கம் இந்த படம் முழுக்க முழுக்க காதல் நிறைந்த கதையாக இருக்குமாம்.

Also Read: கதை கேட்டு மிரண்டு ஓடிய தனுஷ்.. தம்மாத்துண்டு இருக்கிற நான் எப்படி டானா?

Trending News