ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய வார்னர் மனைவி.. கஷ்ட காலத்தில் உதவாத ஆஸ்திரேலிய டீம்

எந்த ஒரு அனுபவமும் இன்றி ஆஸ்திரேலியா தேசிய அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் தான் டேவிட் வார்னர். பல சாதனைகளை புரிந்து தன்னுடைய டீமை பெருமைப்படுத்திய இவர் சில வருடங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதனால் ஒரு வருட காலம் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் இவர் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவருடைய மனைவி ஆஸ்திரேலியா டீம் குறித்து பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

Also read: ஐபிஎல்லை மிஸ் செய்த 5 நட்சத்திரங்கள்.. கார் விபத்தால் மொத்த கேரியரையும் இழந்த ரிஷப் பண்ட்

அதாவது 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு வருடம் இவர் விளையாடுவதற்கு தடை விதித்த சமயத்தில் வார்னரின் குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறது. அது குறித்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி கிரிக்கெட் விளையாட தடை விதித்த போது தென்னாப்பிரிக்காவில் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.

அந்த சமயத்தில் எங்களுக்கு உதவி செய்வதற்கு எந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அதிகாரிகளும் தயாராக இல்லை. உங்களுடைய பிரச்சனைகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பது போல் தான் அவர்களுடைய நடவடிக்கை இருந்தது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Also read: ஐபிஎல் விளையாடாமலே இந்திய டீமில் என்ட்ரி கொடுத்த வீரர்! சிறப்பான சம்பவம் இதோ 

அந்த சமயத்தில் எங்களுக்கு நெருக்கமானவர்கள் தான் எங்களை கவனித்துக் கொண்டார்கள். அதனால் ஆஸ்திரேலிய டீமை நான் குறை கூறிக் கொண்டு தான் இருப்பேன் என்று அவர் ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்.

அதாவது அந்த சமயத்தில் ஒருவர், அணியின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தாராம். இது குறித்து தற்போது தெரிவித்துள்ள வார்னரின் மனைவி நாங்களும் மனிதர்கள் தான் என்று கோபப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் கிரிக்கெட் டீம் மீது அவர் இப்படி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: காசுக்காக ஐபிஎல் ஆடுகிறிர்கள்.. உலக கோப்பை போட்டிக்கு ஓய்வா.? விளாசும் முன்னால் வீரர்கள்

Trending News