தமிழ் சினிமாவில் இயக்கம் மற்றும் தயாரிப்பில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மணிரத்தினம். இவர் இயக்கிய படங்கள், 6 நேஷனல் பிலிம் அவார்ட், நான்கு பிலிம்பேர் அவார்ட்களையும் தட்டிச் சென்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
தன்னுடைய தனித்துவமான இயக்கத்தில் தலை சிறந்த விளங்கியவர் மணிரத்தினம். இவர் நடிகை சுகாசினி திருமணம் செய்துள்ளார், இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் படைப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
அக்னி நட்சத்திரம்:
1988-ல் பிரபு, கார்த்திக், அமலா, விஜயகுமார், நிரோஷா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அக்னி நட்சத்திரம். இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மிக தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்திருப்பார். இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போதே 6 கோடி வரை வசூலில் செய்ததாம்.
நாயகன்:
கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட படங்களில் இது முக்கியமான படம் நாயகன். மணிரத்னத்தின் இயக்கத்தில் 1987-ல் கமலஹாசன், சரண்யா, கார்த்திகா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. கமலஹாசன் இந்த படத்திற்காக நேஷனல் பிலிம் அவார்டு விருதை பெற்றார், இதுபோன்ற படம் தற்போது வரை இயக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த படத்தின் வெற்றியை வைத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. கேங்ஸ்டர் படங்களுக்கு இது முன்னோடி. நாயகன் படத்தில் வரும் ‘வேலு நாய்க்கர்’ கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
மௌன ராகம்:
கமலுக்கு எப்படி ஒரு கேங்க்ஸ்டர் படம் எடுத்து வெற்றி கொடுத்தாரோ, அதே போல் காதல் காவியத்திலும் கரை கண்டவர் மணிரத்தனம். இதனை 1986-ல் மோகன், ரேவதி இசைஞானி இளையராஜாவின் படைப்பில் வெளிவந்த மௌனராகம் படத்தின் மூலம் நிரூபித்தார்.
இந்த படத்தில் கல்லூரி படிக்கும்போது ரேவதி கார்த்திக் காதலிப்பது போன்றும் பின்பு வீட்டில் கூறியபடி மோகனை திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண்ணின் இரட்டிப்பான மனசை துல்லியமாக வெளிக்கொண்டு வந்திருப்பார் மணிரத்தினம். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை ஒரு முதுகெலும்பு. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 175 நாட்களுக்கு மேல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. பல விருதுகளை தட்டிச் சென்றது, படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் கசாப் மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோஜா:
காதல் மற்றும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக 1992 ஆம் ஆண்டு ரோஜா படம் வெளிவந்தது. இதில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருப்பார்கள், A.R.ரஹ்மான் இசை இந்த படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஒரு கிராமத்துப் பெண் ராணுவத்தில் வேலை செய்யும் ரிஷிகுமார் அதாவது அரவிந்த்சாமியை திருமணம் செய்து கொள்கிறார். அவரை ஒரு தீவிரவாத கூட்டம் கடத்திச் சென்று விட, இதற்கு இடையில் நடக்கும் காதல் போராட்டம் மற்றும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அரவிந்த் சாமியின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது.
இந்தப் படத்தின் வெற்றியினால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பல விருதுகளையும் தட்டிச் சென்றது.
தளபதி:
கமலுக்கு நாயகன் வெற்றிப்படமாக அமைந்தது அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் தளபதி. மணிரத்தினத்தின் பிரமாண்ட இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஸ்ரீவித்யா, பானுப்பிரியா, ஷோபனா போன்ற பல பிரபலங்களின் மூலம் வெளிவந்தது.
இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு இன்னும் சிறப்பு அம்சம். நட்பை மையப்படுத்தி அரசியல் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் படமாக தளபதி அமைந்தது. இதுவும் கேங்ஸ்டர் படங்களில் முக்கியமான படம், இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் 150 நாட்களுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி பல சாதனைகளை படைத்தது.
அஞ்சலி:
ஒரு காட்சி புல்லரிக்கும் விதமாக அமைக்கப்படுவது அவ்வளவு சாத்தியமில்லை அதனை நிரூபித்தவர் மணிரத்தனம் அந்தவகையில் 1990ல் வெளிவந்த அஞ்சலி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ரகுவரன், ரேவதி, ஷாமிலி போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார், இளையராஜாவின் 500வது படம். இந்த படத்திற்காக அஞ்சலி கதாபாத்திரத்திற்கு 3 நேஷனல் பிலிம் அவார்டு வென்றது. இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு 1991ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படம் என்ற பெருமையும் உண்டு.
பம்பாய்:
மகாராஷ்டிராவில் நடக்கும் இந்து-முஸ்லிம் கலவரத்தை மையமாக வைத்து உருவான படம் பம்பாய். இந்த படம் 1995-ம் ஆண்டு அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாபெரும் வெற்றி பெற்றது.
மதக்கலவரத்தை மையப்படுத்தி, காதலின் சுவாரஸ்யத்தை அதிகரித்து மிக பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் பம்பாய். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது, இந்தப் படமும் பல விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அலைபாயுதே:
காதல் காவியத்தில் அலைபாயுதே மிக முக்கியமான படம். மாதவன், ஷாலினி மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த இளைஞர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த படம் அலைபாயுதே.
ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து மருத்துவத்திற்குப் படித்து வெற்றியை நோக்கி செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காதல் ஏற்பட்டால் எப்படி மாறும் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் அவர்கள் சந்தித்தார்கள் என்பதை மிகத் தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்திருப்பார் மணிரத்தினம்.
மறைமுகமான நெகட்டிவ் விமர்சனங்களை கேட்டாலும் பாக்ஸ் ஆபீசில் பெரும் சாதனை படைத்தது. அப்போதே காதல் திருமணம் செய்து கொண்டால் எப்படி வாழ்க்கை சூழ்நிலைகள் மாறும் என்பதை வெளிக்கொண்டு வந்தார் மணிரத்தினம். இவருக்கு இந்த படம் மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.