ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நாளைய சிவகார்த்திகேயன் என ஆட்டம் போடும் ரெண்டு நடிகர்கள்.. இதுல ஒரே நாள்ல பிறந்தநாள் வேறயா!

We are the 2 actors as like Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை பொருத்தவரை அவரை வெறுக்கும் அளவிற்கு யாரும் இல்லை. ஏன் எதற்கு பிடிக்குது என்று சொல்ல காரணமும் இல்லை. அந்த அளவிற்கு எல்லாத்துக்கும் சிவகார்த்திகேயன் என்றால் ஒரு மிகப்பெரிய கிரேஸ் உண்டு. முழுக்க முழுக்க திறமையை மட்டும் நம்பி சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் லிஸ்டில் வந்து விட்டார்.

இவருடைய பேச்சும் செயலும் எதார்த்தமாகவும் இருக்கும். பழகிப் பார்த்தால் நம்ம பக்கத்து வீட்டு பையன் போலவே பழகுவார். அந்த அளவிற்கு ஒரு கேஷுவலான நடிகர். அதனாலேயே எல்லோருடைய மனதிலும் சிவகார்த்திகேயன் குடிபுகுந்து விட்டார். அத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களை குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு மக்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இவரை போலவே தற்போது இரண்டு நடிகர்கள் நாங்கள்தான் நாளைய சிவகார்த்திகேயன் என ஆட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். கொஞ்சம் பார்ப்பதற்கு இளமையாக அழகாக இருந்து விட்டால் உடனே அவர்கள் சிவகார்த்திகேயனாக ஆகிவிட முடியுமா என்ன. ஆனால் இவர்கள் அந்த நினைப்பில் தான் சுற்றி வருகிறார்கள்.

Also read: சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் இறக்கிவிட்ட 50-வது பட போஸ்டர்.. மொட்டை கெட்டப்பில் மிரட்டல்

அவர்கள் வேறு யாரும் இல்லை இசையமைப்பாளராக உள்ளே நுழைந்து தற்போது நடிகராக நடித்து வரும் ஜிவி பிரகாஷ். இவர் நடித்த படங்கள் அப்படியே சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிர் மாறாக தான் இருக்கும். குடும்பத்துடன் பார்க்கும் படியாக சிவகார்த்திகேயன் படம் இருக்கும். ஆனால் ஜிவி பிரகாஷ் படம் குடும்பத்துடன் போய் பார்க்கும் படியாக இருக்காது.

அந்த அளவிற்கு டபுள் மீனிங், தேவையில்லாத காட்சிகள் என அனைத்திற்கும் ஒத்த ஆளாக நின்று நடிப்பாரு. இப்பொழுது இவர் அடுத்த சிவகார்த்திகேயன் என மிதப்பில் சுற்றி வருகிறார். இவரை அடுத்து நடித்ததோ மூன்று படம், அதில் ஒரு படம் தான் தற்போது ஹிட்டாகி மக்களிடத்தில் பேசி வருகிறது. அதற்குள்ளேயும் நான்தான் சிவகார்த்திகேயன் என காலரை தூக்கிவிட்டு சுற்றி வருகிறாராம் ரியோ ராஜ்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜோ படம், காதல் மற்றும் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து லவ்வருக்கு ஒரு கனெக்டிங் படமாகவே நிறைய உணர்வுகளை ஞாபகப்படுத்தி கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரை மக்களுக்கு ஓரளவு பிடித்து போய் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி நாளைய சிவகார்த்திகேயன் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் கூட ஒத்துக்க முடியவில்லை. இதுல வேற ஒரே நாளில் பிறந்ததனால் இன்னும் கெத்தாக அலைகிறார்.

Also read: நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் செய்த கேவலமான வேலை.. ஆண்டவர் இருந்தும் தட்டி கேட்கல

Trending News