திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்

Sun TV, Ethir neechal: சினிமாவை பொறுத்தவரையில் படத்தின் வசூல் குறித்து அதன் லாப கணக்கு பார்க்கப்படும். ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரையில் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வைத்து தான் அதன் நிலை மதிப்பிடப்படும். அவ்வாறு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் சமீபகாலமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வகித்து வருகிறது.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங்க்கு முக்கிய காரணமாக, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இது வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

Also Read : ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிப்பாரா?. அவரே சொன்ன பளிச் பதில்

இந்த சூழலில் மாரிமுத்து இறந்த அன்றே சன் டிவி செய்துள்ள மட்டமான வேலை இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது மாரிமுத்து இறந்த மதியமே எதிர்நீச்சல் தொடரில் அடுத்த குணசேகரனாக நடிப்பதற்காக கிடாரி, கொம்பன் போன்ற படங்களில் நடித்த வேல ராமமூர்த்திக்கு சன் டிவி மூலமாக அழைப்பு வந்துள்ளது.

இதை அவரே சமீபத்தில் பங்கு பெற்ற பேட்டியில் கூறியிருக்கிறார். பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்வதற்கு முன்பே சன் டிவி அடுத்த குணசேகரனை தேடியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

Also Read : டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த பிரபல சீரியல்கள்.. தொடர்ந்து முன்னிலை வகிக்கும் எதிர்நீச்சல்

முற்போக்கு சிந்தனை கொண்ட மாரிமுத்து அவர்களுக்கு இப்படி ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருந்தது. அவரை வெளிச்சத்திற்கு காட்டியது எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரம் தான். அதற்கான மரியாதையை செலுத்தும் விதமாக சன் டிவி ஒரு வீடியோவையும் வெளியிட்டது.

ஆனாலும் எதிர்நீச்சல் தொடர் அடுத்து இடைவிடாமல் ஒளிபரப்பி டிஆர்பியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்த குணசேகரனை தேர்ந்தெடுக்க சன் டிவி மேற்கொண்டது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை பற்றி இப்போது வரை சன் தொலைக்காட்சி இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

Also Read : இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

Trending News