நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருக்கும் கமல்ஹாசனின்‘இந்தியன் 3’படம் குறித்த புதிய தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.இதனால் மூன்றாம் பாகத்தின் வெளியீடு குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.
இந்நிலையில்,கடந்த அக்டோபர் மாதம்‘இந்தியன் 3’படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா நிறுவனம்,படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தியது.மேலும், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே,படத்தில் சில புதிய விஷயங்களைச் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஏற்கெனவே ஒரு வெர்ஷனுக்கு டப்பிங் பேசி முடித்த கமல்ஹாசன் மீண்டும் சில காட்சிகளுக்கு டப்பிங் பேச வேண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும்,படத்தின் இறுதி வடிவம் மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து கமல்ஹாசனிடம் ஒப்புதல் பெறுவதற்காக லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக வலைப்பேச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்த தகவல் தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பு மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.நீண்ட காலமாகக் காத்திருக்கும்‘இந்தியன் 3’ படம் எப்போது திரைக்கு வரும் என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.




