இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அது முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடைபெறும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை இந்திய மண்ணில் எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இந்தியா தோற்றது இல்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டில் அவர்களையே வீழ்த்தியது இன்று வரை இந்தியாவிற்கு பெரிய பலமாக கருதப்படுகிறது.
Also Read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்
இந்திய மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கிறது. 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற கூடிய ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அணிக்குள் வந்தது இந்திய அணிக்கு பெரும் பலம். இந்திய அணியின் ஓப்பனார் சுபம் கில், விராட் கோலி போன்றவர்கள் செம ஃபார்மில் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா அணி பக்கம் சென்றால், இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் வீரர்கள் என்று பார்த்தால் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். இவர்கள் போட்டியை இந்திய அணி பக்கம் இருந்து அவர்கள் பக்கம் மாற்றும் அபாயகரமான வீரர்கள். இவர்கள் எளிதாக இந்திய அணி ஸ்பின்னர்களை சமாளித்து விடுவார்கள்.
Also Read: ஓவர் ஹெட்வெயிட் காட்டும் ஹர்திக் பாண்டியா.. புது கேப்டன் திமிரால் இந்திய அணி படும்பாடு
அதே போல் வேகப்பந்தை பொருத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு தலைவலி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அவர்தான் ஆஸ்திரேலியா அணிக்கு அவர் தான் கேப்டனாக செயல்படுகிறார். அவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட. அதைப்போல் ஸ்பின்னர்கள் யூனிட்டில் நாதன் லயன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்தத் தொடரை பொறுத்தவரை எப்படி பார்த்தாலும் இந்தியாவிற்கு சொந்த மண், ஸ்பின்னர்கள் பலம், விராட் கோலி மற்றும் சுபம் கில்லின் தலைசிறந்த ஃபார்ம். இது எல்லாமே பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. அதனால் இந்த தொடரில் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது.
Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்