வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மருதநாயகம் பட அடுத்த ஹீரோ யார் தெரியுமா? மிரள வைக்கும் புதிய தொழில்நுட்பம், அதிரடி காட்டும் கமல்!

kamalhaasan: கமல்ஹாசனின் சினிமா அனுபவமும் அவர் கற்கும் திறனும் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காது. அந்தளவுக்கு எல்லா துறைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர் அவர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பிரமாண்ட பட்ஜெட் படமான மருதநாயகத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் மருதநாயகம் படத்தை கமல் எடுக்கிறார் என்றால் மருதநாயகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? ‘மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் கடந்த 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள கீழப்பனையூரில் பிறந்தார். இவர், இளமை காலத்தில் கிழக்கிந்தியப் படைகளுக்கு தலைவராகவும் திகழ்ந்தார். ஆங்கிலேயருக்குக் கீழ் பணியாற்றி வந்த நிலையில், பிரிட்டிஷாரும் ஆர்க்காட்டு நவாபுகளும் அவர்களுக்கு எதிராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராகப் போரிட மருதநாயகத்தினைத் தூண்டினர்.

அதன்பின், மதுரையில் நாயக்கர் ஆட்சி முடிவடையும்போது, மதுரையை ஆளும் அதிகாரத்தை ஆங்கிலேயர் மருதநாயகத்திற்கு அளித்து கெளரவித்தனர். தன் வாழ்வின் இறுதியில் அவர், ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்டார். இதற்காக, கடந்த 1764 ஆம் ஆண்டு மதுரையிலுள்ள சம்மட்டிபுரத்த்தை மருதநாயகத்தை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.

படைக்களத்தில் வீரத்துடனும் துடிப்புடனும் செயல்பட்டதால், இராபர்ட் கிளைவ் அவரை தனது படையுடன் இணைத்துக் கொண்டு யூசுப்கானுக்கு ஐரோப்பிய ராணுவ முறைகளில் பயிற்சி அளித்தது’ குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்புகொண்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வீரம் செறிந்த வரலாற்றுப் படமாக எடுக்க உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 90 களில் முயற்சித்தார்.

1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருதநாயகம் என்பது கமலின் லட்சியப் படம். இப்படத்திற்கு இங்கிலாந்து நாட்டு ராணி இந்தியாவுக்கு வந்தபோது இப்படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். இளையராஜாவின் இசையில், விஷ்ணுவர்தன், நாசர், சத்யராஜ், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில், கமல், சுஜாதா திரைக்கதை எழுத, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஹாலிவுட் படத்தின் தரத்தில் இப்படத்தை எடுக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் கனவுக்கு பட்ஜெட் கைகொடுக்கவில்லை. எனவே இன்னும் முழுமைபெறவில்லை. இந்த நிலையில், விஸ்வரூம் உள்ளிட்ட பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்த கமல்ஹாசன், தற்போது மருதநாயகம் படத்தை எடுக்கும் முனைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற கமல்ஹாசன், நவீன தொழில்நுட்பங்கள் பற்றிக் கற்றுக் கொண்டதாகவும், இந்த 60 நாட்களில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, இப்படத்தை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ”பிரமாண்ட பட்ஜெட்டைக் குறைக்க தொழில்நுட்பம் சிறிது கைகொடுக்கும் எனவும் ஏற்கனவே கமல்ஹாசன் ஒன்றைத் தொட்டால் விடமாட்டார் என்பதால் இப்படத்தை நிச்சயம் முழுமையாக எடுத்துவிடுவார். இதில் அவரே தான் ஹீரோவாக நடித்து முடிப்பார்” என பிரபல சினிமா கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கமல் நடிப்பில் மருதநாயகம் படத்திற்கு இளையராஜா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தது. இப்படம் வெளியானால் தமிழ் சினிமாவில் பெருமையாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதை கமலும் மெய்யாக்குவார் என்பதற்கு ஏற்ப விரைவில் இப்பட அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

Trending News