ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மனைவிக்கு கேன்சர்.. சர்ச்சைக்குரிய கருத்துக்காக 850 கோடி கேட்டு கிரிக்கெட் வீரருக்கு நோட்டீஸ்

புற்றுநோய் குறித்து சர்ச்சைக் கருத்துப் பதிவிட்டதாக கூறி பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிடம் ரூ.850 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. இவரது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சி பெற்று வந்த நிலையில், தன் மனைவி புற்றுநோயை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திவிட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ.850 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, செய்தியாளர்களிடம் சித்து பேசியபோது, புற்று நோய் மருந்து பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறியிருந்தார்.

சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி ரூ.850 கோடி நேட்டு நோட்டீஸ்

அதில், தன் மனைவிக்கு 4 ஆம் நிலை புற்றுநோய் இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், கடின உணவு முறையை பின்பற்றிய பின், 40 நாட்களுக்குள் அவர் தன் 4 ஆம் நிலை புற்று நோயில் இருந்து குணமடைந்தார் என்று கூறியிருந்தார்.

மேலும், மக்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களான பால், கோதுமை, சர்க்கரை ஆகியவற்றால்தான் புற்றுநோய் பாதிப்பு தூண்டப்படுகிறது. எலுமிச்சை நீர், துளசி, மஞ்சல், வேப்பிலை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் கேன்சரில் இருந்து விடுபடலாம் என தெரிவித்திருந்தார்.

சித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சத்தீஸ்கர் சிவில் சொசைட்டி, நவ்ஜோத் சித்து புற்று நோய் பற்றி கூறியது உண்மைக்குப் புறம்பானது என்று அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொசைட்டி உறுப்பினர் குல்தீல் சோலங்கி, ’’சித்து தனது மனைவி 4 ஆம் நிலை கேன்சரில் இருந்து அலோபதி மருத்துகள் இன்றி குணமடைந்துவிட்டதாக கூறியது தவறானது. அவரது பேச்சு, கேன்சருடன் போராடி வரும் மக்கள் அலோபதி மருத்துகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சொசைட்டி சார்பில் 850 கோடி இழப்பீடு கேட்டு சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சித்து தான் கூறிய கருத்துகளை 7 நாள்களில் நிரூபிக்க தவறினால் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Trending News