சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விஸ்வரூபம் எடுக்கும் விசித்ராவின் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்.. ஹீரோவுக்கு எதிராக கொடி பிடிப்பாரா ஆண்டவர்.?

Kamal-Vichitra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளசுகளை எல்லாம் ஓவர் டேக் செய்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் விசித்ரா சமீபத்தில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் ஹீரோவின் பெயரை சொல்லவில்லை என்றாலும் இப்போது நெட்டிசன்கள் அது பாலகிருஷ்ணா தான் என கண்டுபிடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து இப்போது இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பலரும் விச்சுவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என உரிமை குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோன்று பெண் பாதுகாப்புக்காக கொடிபிடிக்கும் கமல் இதை எப்படி கொண்டு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் பிரதீப் மீது பெண்கள் ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் போது முதல் ஆளாக இறங்கியது இந்த மக்களின் பிரதிநிதி தான். ஆனால் பெண்களின் பாதுகாப்பு என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு பிரதீப்பை விளக்கம் கூட சொல்ல விடாமல் விரட்டியடித்தது சேனல் தரப்பு.

Also read: விசித்ராவை சினிமாவை விட்டு ஓட வைத்த டாப் ஹீரோ இவர் தான்.. நைட்டு ரூமுக்கு வரமாட்டியா? கொடூர முகத்தை காட்டியவர்

அந்த வகையில் தற்போது விசித்ராவுக்கு ஆதரவாகவும் பாலகிருஷ்ணாவுக்கு எதிராகவும் கமல் பேசுவாரா என்பது சந்தேகம்தான். ஆனாலும் விச்சு இந்த விவகாரத்தை பொதுவெளியில் தற்போது கொண்டு வந்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் மூலம் அவர் கமலை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளி இருக்கிறார்.

மேலும் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த பிரச்சனை நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஆண்டவர் அதை யாருக்கு சாதகமாக கொண்டு செல்ல போகிறார் என்பதுதான் மிகப்பெரிய ட்விஸ்ட்.

அந்த வகையில் விசித்ராவுக்கு நியாயம் கிடைக்குமா இல்ல பிரதீப் நிலைதானா என்பது வார இறுதியில் தெரிந்து விடும். தற்போது தெலுங்கு மீடியாக்களில் கூட இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: டம்மியோட சேர்த்து வெளியேற போகும் விஷ பாட்டில்.. போட்டியாளர்களை கதி கலங்க வைக்க வரும் பிக்பாஸ் முரட்டு பீசு

Trending News