தமிழில் வெற்றி நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இதன் மூலம் தெலுங்கு திரை உலகில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார்.
இவரின் நடிப்பில் வெளிவந்த கடந்த திரைப்படங்கள் யாவும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்திய நிலையில் இந்த பிரின்ஸ் திரைப்படமும் கலெக்ஷனில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது தெலுங்கில் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனென்றால் தெலுங்கில் வெற்றி இயக்குனராக இருக்கும் அனுதீப்பை சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் தெலுங்கில் எப்படியாவது கால் பதித்து வெற்றி கொடி நட வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் பிரின்ஸ் படம் முடிவதற்கு முன்பாகவே தெலுங்கில் அனுதீப்பின் உதவியாளர் ஒரு படத்தை இயக்கியிருந்தார்.
அதற்கு மொத்த ஸ்கிரிப்டையும் எழுதி கொடுத்தது அனுதீப் தான். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இது பிரின்ஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே தெலுங்கு திரையுலகில் இந்த படத்தை பற்றிய எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறது.
Also read:மொத்த கதையையும் மாத்திட்டு படம் பெயிலியர் என கூவும் சிவகார்த்திகேயன்.. கடவுள் இருக்கான் குமாரு
அதனால் அங்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. மிகப்பெரிய திட்டத்துடன் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்த சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான் இதனால் தவறி போகவும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த கலக்கத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயன் இருக்கிறாராம் இருப்பினும் இந்த படத்தை எப்படியாவது ப்ரோமோஷன் செய்து வெற்றியடைய வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பட குழு தற்போது செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் தெலுங்கு கனவு எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Also read:பெரிய இடத்தில் இருந்து வரும் மிரட்டல்.. நாலா பக்கமும் அடிவாங்கும் பிரின்ஸ் படம்