கடந்த காலத்தில் முன்னணி நட்சத்திரங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட நடிகர் சூர்யாவுக்கு, கடந்த சில ஆண்டுகள் திரையரங்குகளில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் அமையாமல் ஒரு சோதனைக் காலமாகவே இருந்தது.
இதே காலகட்டத்தில் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் அசுர வளர்ச்சியும், சிவகார்த்திகேயன் போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களின் அசைக்க முடியாத பாக்ஸ் ஆபீஸ் எழுச்சியும் பெரிதும் பேசப்பட்டன.
சூர்யாவின் இந்தத் தொடர் சறுக்கல்களுக்குப் பிறகு, அவர் மீதான விமர்சனங்களும், பிற நடிகர்களின் வளர்ச்சியைக் கண்டு அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். தன் படங்களின் வசனங்களிலேயே அதற்கான மறைமுகப் பதிலடிகளைக் கொடுத்து வந்தாலும், தியேட்டரில் ஒரு மிகப்பெரிய மாஸ் பிளாக்பஸ்டர் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான ‘கருப்பு’ திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் நல்ல வரவேற்பைப் பெற்று, அவரது பாக்ஸ் ஆபீஸ் சந்தையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
தற்போது ‘ஆவேசம்’ புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியாகவுள்ளது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம். ஏற்கனவே இரண்டு வெற்றிகளைக் கொடுத்துள்ள சூர்யாவுக்கு, இத்திரைப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா? என்ற மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒருவேளை ‘சீன்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றால், தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட பாக்ஸ் ஆபீஸ் பந்தயத்தில் சூர்யா தனக்கான இடத்தை மீண்டும் முழுமையாக நிலைநிறுத்திக்கொள்வார். இல்லையெனில், மீண்டும் பழையபடி விமர்சனங்களுக்கும் புலம்பல்களுக்கும் ஆளாக வேண்டிய சூழல் உருவெடுக்கும்.




