11 வருட கதையை தூசி தட்டும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. கிரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்.?

Actor Vijay: லியோ படம் முடிந்த கையோடு விஜய் அடுத்ததாக தன்னுடைய 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கவும் படகுழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்க்காக ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் மேனன் 11 வருடங்களாக காத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு கெளதம் மேனன் விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார்.

Also read: லோகேஷ் இயக்கும்போது நா செத்தா கூட பரவாயில்ல.. சென்டிமென்ட் ஆக பேசி லியோ பட வாய்ப்பு வாங்கிய வில்லன்

இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட அப்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்று வரை ஒரு வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அதைப் போக்கும் வகையில் மீண்டும் அப்படத்தை தூசி தட்டுவதற்கு கௌதம் மேனன் தயாராகி விட்டார்.

அதாவது சமீபத்தில் அவரிடம் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு ஏதேனும் கதை கூறினீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கௌதம் மேனன், அங்கு நான் ஒரு நடிகனாக மட்டுமே சென்றேன். ஆனால் ஏற்கனவே விஜய்க்கு ஒரு கதையை கூறி நான் ஓகே செய்து வைத்திருக்கிறேன்.

Also read: விஜய் பண்ணா மட்டும் தான் தப்பா, ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. சர்ச்சையை கிளப்பும் ஜெயிலர் போஸ்டர்

அந்தப் படம் தான் யோஹன் அத்தியாயம் ஒன்று. அந்த கதை விஜய்க்காகவே உருவாக்கப்பட்டது. இன்னும் அப்படியே தான் இருக்கிறது. விஜய் மட்டும் கிரீன் சிக்னல் கொடுத்தால் படத்தை ஆரம்பித்து விடலாம் என்று உற்சாகமாக கூறியுள்ளார். இதுவே தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

யோஹன் அத்தியாயம் ஒன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

yohan-vijay-poster
yohan-vijay-poster

சூர்யா, அஜித், கமல் போன்ற நடிகர்களுக்கு கேரியர் பெஸ்ட் படங்களை கொடுத்த கெளதம் மேனன் விஜய்யை வைத்து படம் இயக்காதது ரசிகர்களுக்கு பெரும் குறையாக இருக்கிறது. அதை போக்கும் வகையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யோஹன் அத்தியாயம் ஒன்று தொடங்கப்படுமா, விஜய் அதற்கு கிரீன் சிக்னல் கொடுப்பாரா என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.

Also read: லியோ பட நடிகைக்கு குவியும் வாய்ப்பு.. முதல் ஆளாக துண்டு போட்ட அருள்நிதி