திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அசைவம் சாப்பிட்டால் சீக்கிரம் இறந்து விடுவோமா.? வாய கொடுத்து புண்ணாக்கி கிட்ட சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு இருக்கிறது.

இந்நிலையில் 72 வயதான ரஜினி எப்போதும் தன்னுடைய கெத்து குறையாமல் கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தனக்கே உரித்தான தனி ஸ்டைல் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். இதனால் தற்போது அவர் எந்த விழாவிற்கு சென்றாலும் அவருடைய ரசிகர்களுக்காகவே கொஞ்ச நேரம் உரையாடும் வழக்கத்தை வைத்திருப்பார்.

Also Read: ரஜினியை மனுசனாக மாற்றிய பிரபல பாடகி.. மேடைப்பேச்சில் அசர வைத்த சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் சமீபத்தில் அவர் தன்னைப் பற்றியும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்த கெட்ட பழக்க வழக்கத்தையும் உடைத்துக் கூறினார். இது தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் தற்போது ஒரு மேடையில் தனக்கு மூன்று கெட்ட பழக்கம் இருந்தது சிகரெட் குடிப்பது, மது அருந்து, அசைவம் சாப்பிடுவது என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மூன்றும் இருப்பவர்கள் 60 வயதிற்கு மேல் உயிருடன் இருக்க மாட்டார்கள். அதை மீறி இருந்தால் படுத்த படுக்கையாக இருப்பார்கள் எனக் கூறி இருந்தார். அப்போ அசைவம் என்பது கெட்ட பழக்கமா அது சாப்பிடுபவர்கள் இறந்து விடுவார்கள் என்று அர்த்தமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Also Read: முதல் நாளே 100 கோடி வசூல் செய்த 7 படங்கள்.. ஷாருக்கானுக்கு முன்பே சாதித்த நம்ம சூப்பர் ஸ்டார்

உலகத்தில் அதிகமான சாப்பிடும் உணவு அசைவம். அவர்களெல்லாம் இறந்து விட்டார்களா? ரஜினிக்கு கெட்ட பழக்கம் சிகரெட் மற்றும் குடி பழக்கம் இருந்ததால் அவரது உடம்பு பிரச்சினை வந்திருக்கிறது. அதையெல்லாம் மேலோட்டமாய் சொல்லிவிட்டு அசைவம் சாப்பிடுவதை மட்டும் ரஜினி அழுத்தி சொல்லி இருக்கிறார்.

இதை விட்டதால் நன்றாக இருக்கிறேன் என்று கூறிய ரஜினி, அப்போது எதற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அப்படி என்றால் சிகிச்சையினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியாது என்பதே ரஜினியின் அர்த்தம். இதனால் அசைவம் கெட்ட பழக்கம் எனக் கூறிய ரஜினிக்கு பல இடங்களில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

Also Read: டாப் ஹீரோக்கள் படங்களின் பிரபலம் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரை உலகம்

Trending News