IPL Price Money: 2024 ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்தது. 40 நாட்கள் நடைபெற்ற தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இச்சாதனையை செய்துள்ளது. 2012-2014-2024 என மூன்று முறை கே கே ஆர், ஐ பி ல் கோப்பையை வென்றது
கொல்கத்தா அணியின் ஓனர் ஷாருக்கான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில்அணியின் ஓனர் சன் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் கலாநிதி மாறன். இவ்விரு ஓனர்களுமே தங்கள் அணியில் விளையாடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகைகளை வாரி வழங்கியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் போன்ற இந்திய வீரர்கள் கே கே ஆர் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிகவும் உற்சாகத்தில் இருக்கும் அந்த அணியின் ஓனர் ஷாருக்கான், வீரர்களுக்கு நைட் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். நரேன், மைக்கேல் ஸ்டார்க், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் பார்ட்டியில் அசத்தல் நடனம் ஆடி அனுபவித்தனர்.
வின்னர், ரன்னர் பர்பிள், ஆரஞ்சு என பணத்தில் குளித்த வீரர்கள்
நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதல் ஏழு ஓவருக்குள் நான்கு டிக்கெட்டுகளை இழந்து போட்டியை எளிதாக விட்டுக் கொடுத்தது. சன்ரைசர்ஸ் ஓனர் கலாநிதி மாறன் வாரிசான காவியா மாதவன் தன் அணி தோல்வி அடைந்ததை அடுத்து மைதானத்திலேயே அழுது புரண்டு விட்டார்.
இருந்தாலும், இறுதி போட்டி என்பதால் சன்ரைசர்ஸ் அணிக்கும் பரிசு தொகை கிடைத்தது. வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடிகள் கிடைத்தது. இரண்டாம் இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் அணி 13 கோடிகளை பெற்றது.
அதிகமாக 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் வாங்கிய விராட் கோலி 10 லட்சம் பெற்றார். அதைப்போல் 24 விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பில் கேப் வாங்கிய ஹர்ஷல் பட்டேலுக்கும் 10 லட்சம் கிடைத்தது.
ஐபிஎல்-2024 நடந்த சுவாரசியமான சம்பவங்கள்
- அதிர்ச்சியில் இருந்து மீளாத சிஎஸ்கே அணி
- ஐபிஎல்-க்கு ஒரு நாளுக்கு முன் வந்த அதிர்ச்சி தகவல்
- தோனியை மிஞ்சி சம்பளம் வாங்கும் அந்த வீரர்