சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

போதாத காலத்தை பயன்படுத்திக்கொண்ட 7 விக்கெட் கீப்பர்கள்.. சைத்தான் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி

விக்கெட் கீப்பரான நயன் மோங்கியா ஓய்வுக்குப் பின் இந்திய அணியில் கீப்பிங் செய்வதற்கு ஒரு பெரிய வெற்றிடம் உண்டானது. ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்குள் வருவதும், போவதுமாய் இருந்தனர் அந்த நேரத்தில் விக்கெட் கீப்பெறுக்கான வாய்ப்பை எளிதாக பெற்ற 7 இந்திய வீரர்களை இதில் பார்க்கலாம்,

எம் எஸ் கே பிரசாத்: கங்குலிக்கு முன் பிசிசிஐ போர்டு தலைவர் பதவியில் இருந்தவர்தான் இந்த எம்எஸ்கே பிரசாத். இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டி 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். விக்கெட் கீப்பர் இல்லாததால் இவரும் சில காலம் இந்திய அணிக்காக விளையாடினார்.

அஜய் ராத்ர: கீப்பர் என்ற பெயரில் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டி, 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரை கீப்பராக வைத்தும் இந்திய அணி விளையாடியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

டீப் தாஸ் குப்தா: மற்றவர்களை ஒப்பிடும்போது இவர் சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விக்கெட் கீப்பரே. டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சற்று நல்லபடி விளையாடியுள்ளார். மொத்தமாக 344 ரன்களை அடித்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி உள்ளார்.

சமீர் டிகே: பெயரே புதுசா இருக்கு, இவரும் இந்திய அணியின் கீப்பராக விளையாடியுள்ளார். இவர் கணக்கும், 6 டெஸ்ட் மற்றும் 23 ஒரு நாள் போட்டி மட்டுமே.

விஜய் தாகியா: இவரும் ஓரளவு ஆறுதல் அளிக்கக்கூடிய விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடி அரைசதம் கூட அடித்துள்ளார். 2 டெஸ்ட் போட்டியில் 2 ரன்களும். 19 ஒருநாள் போட்டியில் 216 ரன்களும் எடுத்துள்ளார்.

செய்யது சபா கரிம்: இவர் இந்திய அணிக்காக 34 ஒருநாள் போட்டியிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி உள்ளார். இவரையும் கீப்பராக வைத்து இந்திய அணி செயல்பட்டது.

பார்த்திவ் படேல்: 18 வயதில் இந்திய அணிக்குள் வந்தவர் பார்த்தீவ் பட்டேல். மற்றவர்களை ஒப்பிடும்போது இவர் சற்று நல்ல கீப்பர் ஆகவே செயல்பட்டார். தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனியின் வருகைக்கு பின்னர் அணியில் இருந்து காணாமல் போய்விட்டார்.

- Advertisement -spot_img

Trending News