ஒரு வருடத்திற்கு 25 படங்கள் கொடுத்த ஹீரோக்கள் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகர் இப்போது மொத்தம் 45 படங்களில் நடித்து கொண்டிருக்கிறாராம். இந்த நடிகரின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான் என்று கோலிவுட்டில் பேசி கொள்கிறார்கள்.
கோலிவுட்டின் காமெடி உலகத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் எல்லாம் எப்போதுமே கிங் தான். ஒரு ஒரு காலகட்டத்தில் இவர்கள் தமிழ் சினிமாவையே ஆக்கிரமித்து இருந்தார்கள் என்றே சொல்லலாம். பெரிய பெரிய ஸ்டார்கள் எல்லாம் இவர்களை நம்பி தான் படத்தை எடுத்தார்கள் என்றே சொல்லலாம்.
Also Read: சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு
இதில் வடிவேலு ஒரு சில காரணங்களால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சந்தானம் நடித்தால் ஹீரோ தான் என்று காமெடி டிராக்கை கழட்டி விட்டு விட்டார். இந்த கேப்பில் வரிசையாக காமெடி ஸ்டார்ஸ் என்று வந்தவர்கள் தான் சூரி, சதிஷ், யோகி பாபு.
இந்த மூன்று பேரில் நடிகர் யோகி பாபுவுக்கு தான் பயங்கர டிமாண்ட். அமீரின் யோகி படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஒரு சில படங்கள் நடித்தார். இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் யோகி பாபுவுக்கு கோலிவுட்டில் ஒரு அடையாளம் கிடைத்தது.
Also Read: கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து
யோகி பாபு இப்போது படு பிஸியான நடிகர் ஆகி விட்டார். காமெடி மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். யோகிபாபுவின் கைவசம் இப்போது 45 படங்கள் இருக்கிறதாம். அதில் 15 படங்கள் ஹீரோவாக பண்ணுகிறாராம். ஒரு படத்திற்கு இவரே கதை எழுதி நடிக்கிறாராம்.
நானே வருவேன், தாதா, கோல்மால், காபி வித் காதல், பொம்மை நாயகி, மாவீரன், சுமோ, மெடிக்கல் மிராக்கள், ஓ மை கோஸ்ட், பூமர் அங்கிள், அந்தகன், ஜெயிலர், வாரிசு, பார்ட்னர், அயலான் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன.
Also Read: காசுக்காக இப்படியா பண்றது.. சினிமாவில் நடக்கும் கேவலத்தை சொன்ன யோகி பாபு