BCCI Shuts door for young Player: கிரிக்கெட் வீரர்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிகளை மீறுவது என்பது எப்பொழுதும் ஒரு அலாதிய பிரியம். அப்படி சமீபத்தில் ஒரு இளம் அதிரடி வீரர் தன்னுடைய கிரிக்கெட் கேரியரையே கேள்விக்குறியாக்கும் செயலில் ஈடுபட்டு, இப்பொழுது 20 ஓவர் உலகக் கோப்பை விளையாடும் அணியில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வந்தவர் ஷ்ரேயஸ் ஐயர்.சமீப காலமாக சரியாக விளையாடத காரணத்தால் இங்கிலாந்து தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை அணி நிர்வாகம் ரஞ்சி போட்டிகளில் விளையாடுமாறு வலியுறுத்தியது.
தலைக்கனத்தால் கேரியரை தொலைத்த அதிரடி ஆட்டக்காரர்
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு முதுகு வலி இருக்கும் காரணத்தால் தனது மாநில அணியான மும்பை அணியில் விளையாடாமல் சாக்கு போக்கு சொல்லி வந்தார். பிசிசிஐ கொடுத்த தொடர் அழுத்தத்தால் ரஞ்சி ட்ராபி தொடரின் செமி பைனல் மற்றும் பைனலில் விளையாடினார்.
அதன் பின்னும் தனக்கு முதுகு வலி இருக்கிறது என்று கூறி போட்டிகளை தவிர்த்து வந்த நிலையில் ,பூதாகரமாக ஒரு செயல் செய்து வசமாக பிசிசிஐ இடம் மாட்டிக்கொண்டார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக தனது அணியான கே கே ஆர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்தது தான் இப்பொழுது கடும் விவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது .
முதுகு வலி என்று சொல்லிக்கொண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடுவது தவறு என்று அவருக்கு பதிலாக பிசிசிஐ சப்ராஸ்கானுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வந்துள்ளது.இதனால் இனிவரும் ஆட்டங்களில் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகம் தான்