சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

கொடுத்த வாய்ப்பை வீணடிக்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. அதிர்ஷ்டம் இல்லாமல் அல்லோலப்படும் இளசுகள்

இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய புதுமுக வீரர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களை வைத்து வருங்கால இந்திய அணியை கட்டமைக்க கிரிக்கெட் போர்டு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அவர்களில் பல திறமையான வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு அவர்களாலேயே வீணடிக்கப்படுகிறது.. 20 ஓவர் ஐபிஎல் போட்டிகள் நிறைய திறமையான வீரர்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

11 பேர் கொண்ட அணியில் யாரை எடுப்பது என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையும் உருவாகிவருகிறது. அப்படி இருக்கையில் அவர்கள் 2-3 போட்டிகளில் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வாய்ப்பு பறிபோகிறது. அப்படி கொடுத்த வாய்ப்புகளை வீணடிக்கும் 5 இளம் நட்சத்திரங்கள்.

சஞ்சு சாம்சன்: கேரளத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் இவர். ஐபிஎல் போட்டிகளில் எதிரணியை அச்சுறுத்தும் இவர் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். இதன் மூலமே எளிதில் இந்திய அணிக்குள் வாய்ப்பையும் பெற்றார். இப்பொழுது இந்திய அணியில் சற்று சொதப்பி வருகிறார் என்றே கூறலாம்.

ரிஷப் பண்ட்: தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பெற்ற இவர் அவசரப்பட்டு நிறைய போட்டிகளில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். தோனியின் இடத்தை நிரப்ப வந்த இவருக்கு இப்பொழுது இந்திய அணியில் கெட்ட நேரம்தான் நிலவிவருகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட்: சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில் கலக்கி வந்த இவர் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றாலும் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் நம்பிக்கையையும் காற்றில் பறக்க விட்டு வருகிறார்.

ஸ்ரேயாஸ் அய்யர்: டெல்லி அணியின் கேப்டனாக கலக்கி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இப்பொழுது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு இந்திய அணியில் பல வாய்ப்புகளை கொட்டிக் கொடுத்தாலும் சமீபகாலமாக தம்பியின் ஆட்டம் சற்று மோசமாகத்தான் இருந்து வருகிறது.

ஷிவம் டுபே: ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா வின் ரீப்ளேஸ்மென்ட் என்றெல்லாம் ஆரம்பத்தில் பெயர் இருந்தார். இவர் மீடியம் பாஸ்ட் வீசக்கூடிய பந்து வீச்சாளரும் கூட. இதன் மூலம் இந்திய அணிக்குள் எளிதாகm இடத்தை பிடித்த இவர் இப்பொழுது தன்னுடைய வாய்ப்பை கேள்விக்குறியாக்கி வருகிறார்

- Advertisement -spot_img

Trending News