Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அடேய் யூடியூப் செலிபிரிட்டிகளா? தீபாவளி முடியுற வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்கடா!

அடேய் யூடியூப் செலிபிரிட்டிகளா? தீபாவளி முடியுற வரைக்கும் கொஞ்சம் சும்மா இருங்கடா!

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. போனை எடுத்தாலே போதும். ஒரு பக்கம் பட்டாசு ஆஃபர், இன்னொரு பக்கம் இனிப்பு ஆஃபர், 80 சதவீதம் தள்ளுபடி, கிலோ கணக்கில் இவ்வளவு ரூபாய் என விளம்பரங்கள் குவிந்து கிடக்கிறது. முன்பெல்லாம் […]

தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. போனை எடுத்தாலே போதும். ஒரு பக்கம் பட்டாசு ஆஃபர், இன்னொரு பக்கம் இனிப்பு ஆஃபர், 80 சதவீதம் தள்ளுபடி, கிலோ கணக்கில் இவ்வளவு ரூபாய் என விளம்பரங்கள் குவிந்து கிடக்கிறது.

முன்பெல்லாம் தீபாவளி என்றால் நமக்கு பிடித்த கடைக்கு போவோம். அங்கே நமக்கு பிடித்த இனிப்புகளை வாங்குவோம். வீட்டுக்கு கொண்டு வந்து குடும்பத்தோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான்.

ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில் ஆங்காங்கே மண்டபங்களை பிடித்து, அங்கேயே இனிப்பு வகைகளை தயாரித்து, அதற்கு பிரபலமான யூடியூபர்களை அழைத்து வந்து, அந்த உணவு எப்படி இருக்கிறது, என்ன ஸ்பெஷல், எவ்வளவு ஆஃபர் என்று விதவிதமாக பேச வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.

அதே மாதிரி பிரியாணிக்கும் ஆஃபர் மழை. இந்தக் கடையில் ரூ.499, அந்தக் கடையில் ரூ.899, இன்னொரு இடத்தில் ரூ.1199 என்று போனை திறந்தாலே வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால், தீபாவளிக்கு வீட்டில் சமைத்து குடும்பத்தோடு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே கொஞ்சம் கொஞ்சமாக போய்விடும் போல இருக்கிறது.

இங்கே பிரச்சனை யூடியூபர்கள் விளம்பரம் செய்வதிலேயே இல்லை. அவர்களிடம் ஒரு விஷயத்தைத்தான் கேட்க வேண்டும். பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் நல்லது என்று சொல்லிவிட வேண்டுமா?

ஒரு பொருளை உண்மையாக பயன்படுத்திப் பார்த்து பிடித்திருந்தால் சொல்லுங்கள். சாப்பிட்டு உண்மையிலேயே நன்றாக இருந்தால் சொல்லுங்கள். ஆனால் பணம் கொடுத்தார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் சூப்பர், வேற லெவல், மிஸ் பண்ணாதீங்க என்று சொல்ல ஆரம்பித்தால், கடைசியில் ஏமாறுவது பொதுமக்கள்தான்.

தீபாவளி ஒரு சந்தோஷமான பண்டிகை. அதை முழுவதும் விளம்பரங்களுக்குள் சிக்கவைத்து விடாமல், நமக்கு தேவையானதை மட்டும் பார்த்து வாங்குவோம்.

யூடியூப் செலிபிரிட்டிகள் பணத்துக்காக விளம்பரம் செய்வார்கள். ஆனால் பணத்தை செலவு செய்வது நாம்தான். அதனால் கொஞ்சம் உஷாரா இருப்பது நல்லது!

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.