வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுரேஷ் ரெய்னா இடத்தை பிடிக்க வந்த சூறாவளி.. பவுலர்களே உஷார் அந்த பையன் கிட்ட பயமில்லை

தொடர்ந்து விளையாடுறோமோ இல்லையோ ஆடும் போட்டியில் ஒரு இம்பேக்ட் கிரியேட் பண்ணி விட வேண்டும். இதுதான் இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களின் மந்திரச் சொல். இளம் வீரர்கள் பலர் துணிச்சலோடு விளையாடுவது இந்திய அணிக்கு பெறும் பலமாக அமைந்து வருகிறது.

சமீபத்தில் இந்திய அணில் இடம் பெற்று விளையாடி வரும் சுபம் கில் , இசான் கிசான் போன்ற வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை அசால்டாக அடித்து நொறுக்குகின்றனர். ஒரு அனுபவமிக்க வீரரை போல இவர்கள் விளையாடுவது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்னும் நிறைய அதிரடி இளம் வீரர்கள் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள்.

இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம் மற்றும் கண்சிஸ்டெண்சியால், யாரை அணிக்குள் சேர்ப்பது, யாரை பெஞ்சில் அமர வைப்பது என்ற குழப்பம் நிலவி வருகிறது. எல்லா விரர்களும் தொடர்ந்து தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர் . அதனால் சுழற்சி முறையில் தான் இந்திய அணி களமிறங்குகிறது. ஒருநாள் போட்டி,, டெஸ்ட் போட்டி, T- 20 தொடர் என எல்லாவற்றிற்கும் புதுப்புது அணிகளாக களம் இறங்குகிறது.

சீனியர் மற்றும் அதிரடி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா இவர்களுக்கே 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் படையை கொண்டு விளையாடி வருகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு புது அணி 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வருகிறது.

இப்பொழுது இந்திய அணியில் ஒரு புதுமுக வீரர் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தே இவர் விளையாடும் போட்டிகள் அனைத்தும் ரசிக்க கூடியதாகவும் , அபாரமாகவும் இருக்கிறது. அடுத்த சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு ரெடி எனவும் மூத்த வீரர்கள் பலர் இவரது ஆட்டத்தை பார்த்து ஆர்ப்பரித்து வருகின்றனர்.

வெறும் 21 வயதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னுடைய அபாரமான திறமையை காட்டியவர் திலக் வர்மா. இவர் தான் இப்பொழுது இந்திய அணியின் எதிர்காலமாய் மாறியிருக்கிறார். பயமே இல்லாமல் அனைத்து பவுலர்களையும் கதறவிடுகிறார். அந்த பையனுக்கு பயம் இல்லை என்று இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூட புகழாரம் சூட்டி வருகிறார். இவர் வருங்கால இந்திய அணியின் ஒரு தூண் போல் நிற்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News