
இந்திய மாஸ்டர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்கள் என இரு அணிகளும் வயதானவர்கள் விளையாடி வரும் தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது . இந்த தொடரில் இந்திய மாஸ்டர்கள் அணி ஆஸ்திரேலியாவுடன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்திருந்தது. இதனால் எளிதாக பைனலுக்கு முன்னேறியது.
இந்திய மாஸ்டர்கள் ஏற்கனவே தோல்வியடைந்த ஆஸ்திரேலியா உடன் மீண்டும் அரையிறுதி போட்டியில் மோதி அவர்களை தோற்கடித்து, இறுதி போட்டிக்கு வந்தனர். கடந்த 16ஆம் தேதி மேற்கிந்திய அணிகளுடன் மோதிய இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடந்த அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு 148 ரன்களை இலக்காக கொடுத்தது. அதை18து ஓவரில் இந்திய அணி அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்ட் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஆக்ரோசமாக மோதிக் கொண்டனர்.
இந்திய அணி வெற்றியை நெருங்கும் சமயத்தில் யுவராஜ் சிங் மீது டினோ பெஸ்ட் கோபம் கொண்டு மோதலில் ஈடுபட்டார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அம்பையர் பில்லி பௌடன் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் யுவராஜ் சிங்கை சம்மாதானப்படுத்தினார்கள். இருந்த போதும் யுவராஜ் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தார்.
அதன்பின் பிரைன் லாரா தலையிட்டு சண்டையை கட்டுக்குள் கொண்டு வந்தார். டினோ பெஸ்ட் தகாத வார்த்தையால் திட்டியதாகவும், அதனால் யுவராஜ் அவர் மீது பாய்ந்ததாகவும் கூறுகின்றனர். அந்த போட்டியில் டினோ பெஸ்ட் தான் மூன்று ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை எளிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.