சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரெடியாகிறது சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு.. ஆச்சரியப்படுத்தும் ஹீரோ மற்றும் பட பெயர்

Yuvraj Singh: தமிழ் சினிமாவில் இப்பொழுது பயோக் படங்கள் எடுப்பது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதுதான் முக்கியமான தலைவர்கள், பிரபலமான வீரர்கள், போன்ற வாழ்க்கையில் சாதித்தவர்களின் கதையை எடுப்பது. இது போன்ற தலைவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், முன்னேற்றங்கள், நல்லது, கெட்டது என அனைத்தையும் தெளிவாக காட்டும் கதையை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே காமராஜர், பெரியார், வாழ்க்கை வரலாற்றில் ஆரம்பித்து தற்போது விளையாட்டு வீரர்கள், என எல்லோருடைய வாழ்க்கை வரலாற்றையும் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக எடுத்து வெற்றி கண்டனர்.

தற்போது தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா, பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முன்வந்துள்ளனர். சிவகார்த்திகேயன் கூட ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோக் கதையில்தான் இப்பொழுது அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகேந்திர சிங் தோனியின் “தி அன் டோல்டு ஸ்டோரி” படம் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், தோனி போல் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். இப்பொழுது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

ஆச்சரியப்படுத்தும் ஹீரோ மற்றும் பட பெயர்

இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை யுவராஜ் சிங் தான் இயக்க உள்ளாராம். இதை அவரது தந்தை சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். “”தி மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்” இதுதான் படத்தின் பெயர் என்றும் கூட அறிவித்துவிட்டார்.

இப்பொழுது இந்த படத்தில் நடிப்பதற்கு ஹீரோக்களை தேடும் பணியில் இறங்கியுள்ளார் யுவராஜ் சிங். அவரது நண்பரான ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரன்பீர் கபூர் நடிக்க முடியாமல் போனால் யுவராஜ் சிங்கே நடிப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Trending News