சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

Kalanithi Maran : கலாநிதி மாறனை அவமதித்த ஜீ டிவி.. சன் டிவி விஸ்வரூபம் எடுக்க காரணம்

என்ன தான் புதுவிதமான தொலைக்காட்சிகள் வந்தாலும் சன் டிவிக்கு இணையான இடத்தை தற்போதும் எந்த தொலைக்காட்சியால் பிடிக்க முடியவில்லை. ஓரளவு விஜய் டிவி இப்போது சன் டிவியின் டிஆர்பியில் சரி சமமாக பெற்று வருகிறது.

மேலும் பெரும்பாலும் சீரியல் மூலமாகத்தான் ரசிகர்களை சன் டிவி சென்றடைந்தது. இந்நிலையில் கலாநிதி மாறன் தனது தொலைக்காட்சியை விஸ்வரூபம் எடுக்க வைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது 90களில் அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா வருகிறார் கலாநிதி மாறன்.

அப்போது சென்னையில் அவரது குடும்பம் பத்திரிக்கை நடத்தி வருகிறார்கள். இதை மக்களுக்கு புரியும்படி வீடியோவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கலாநிதி மாறன் எண்ணுகிறார். அதோடு வெளிநாடுகளில் டிவி மீது அதிக ஈர்ப்பு இருப்பதால் இன்னும் இது போல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

சன் டிவி உருவான வரலாறு

அப்போதுதான் ஜீ டிவியிடம் சென்று கலாநிதி மாறன் தமிழில் ஒரு நிகழ்ச்சி தொடங்கலாம் என்று கூறி இருக்கிறார். ஆனால் இதையெல்லாம் பார்க்க ஹிந்தி ஆடியன்ஸ் தான் விரும்புவார்கள். இதெல்லாம் செட் ஆகாது என அங்கு உள்ள நிறுவனர் மேனேஜரை பார்க்க கூட கலாநிதியை அனுமதிக்காமல் செய்துவிட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த கலாநிதிமாறன் சென்னையில் லோக்கல் சேனலில் உள்ள 25 பேரை அழைத்து அவர்களோடு இணைந்து சன் டிவி என்ற ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார். ஆரம்பத்தில் மதியம் மட்டும் தமிழ் மாலை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர்.

இந்நிகழ்ச்சி வரவேற்பு பெற்றவுடன் அடுத்தடுத்து நிகழ்ச்சியை ஒளிபரப்பி ஒரு நிலையான தொலைக்காட்சியாக கலாநிதி மாறன் உருவாக்கினார். இப்போது எத்தனை புதுவிதமான தொலைக்காட்சிகள் வந்தாலும் சன் டிவிக்கு என்று தனி ரசிகர்கள் இருந்துதான் வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News