திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வேட்டையாடு விளையாடு பார்த்து இன்று ரீ-ரிலீஸ் ஆன 10 படங்கள்.. பாபாவில் விட்டதை தட்டி தூக்க திட்டமிட்ட ரஜினி

 Re Release Tamil Movies: சினிமா பிரியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அன்றைய தினத்தில் தான் புதுப்புது படங்கள் ரிலீஸ் செய்து திரையரங்கில் அமர்க்களப்படுத்தும். ஆனால் இன்று ஆகஸ்ட் 4ம் தேதியான ஆடி வெள்ளியில் புது படங்கள் பெரிதாக எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

ஆகையால் வேறு வழி இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 10 படங்களை இன்றைய தினத்தில் ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கின்றனர். அதுவும் இதில் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜய், சூர்யா படங்கள் இடம்பெற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்கில் குவிய வைத்திருக்கிறது.

Also Read: விஜய் குட்டி ஸ்டோரியை வைத்து பதிலடி கொடுப்பதற்கு நாள் குறிச்சாச்சு.. பிரம்மாண்டமாக வரவுள்ள லியோ ஆடியோ லான்ச்

இந்தக் காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு 80களில் எப்படி காதல் செய்தனர் என்பதை காட்டும் விதமாக இருந்த சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படத்தை இன்று ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிய சிம்புவின் பத்து தல படமும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் படமும் வெளியாகி இருக்கிறது.

இது மட்டுமல்ல அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல், தெறி போன்ற இரண்டு படங்கள் வெளியாகி தளபதி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. மேலும் மணிரத்தினம் இயக்கிய ஓகே கண்மணி, ராவணன் போன்ற படங்களும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Also Read: கேப்டன், கமல் மாதிரி வெற்றி வேண்டும் என முயற்சித்து ரஜினிக்கு பிளாப்பான படம்.. சூதானமா யோசிச்சாலும் சட்ட கிழிஞ்சது தான் மிச்சம்

அத்துடன் பாபா படத்தை ரீலீஸ் செய்து மொக்கை வாங்கிய ரஜினி இந்த முறை 80களில் அவர் நடிப்பில் வெளியான மூன்று முகம் மற்றும் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘சிவாஜி: தி பாஸ்’ என்ற படத்தையும் கில்லாடி ஆக திட்டம் தீட்டி வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இன்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 10 படங்கள் வெளியாக்குவதற்கு கமல் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஏனென்றால் அவர் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தை சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்து கோடிகளில் வசூலை அள்ளினார்கள். அந்த படம் கொடுத்த பேராசை தான் இப்போது முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது. இதில் ஒரே ஒரு கவலை என்னவென்றால் அஜித் படம் இல்லை என்பதுதான்.

Also Read: ஜெயிலரின் வெற்றியைப் பொறுத்து தூசி தட்டப்படும் அடுத்த படம்.. நெல்சன் போட்ட கணக்கு ஜெயிக்குமா?

Trending News