வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல் நாள் கலெக்ஷனில் மிரட்டிய 10 திரைப்படங்கள்.. முதலிடத்தை தக்க வைத்துள்ள அஜித்

சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடந்த திரையுலகம் இப்போதுதான் விறுவிறுப்பை பெற்றுள்ளது. அதிலும் இந்த வருடத்தில் வெளியான பல திரைப்படங்கள் வசூலில் மிரட்டி இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சிறந்த ஓப்பனிங் பெற்ற 10 திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

கேஜிஎப் 2: பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த இரண்டாம் பாகமும் வசூலில் நல்ல லாபம் பெற்றது. அந்த வகையில் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளிலேயே 8.24 கோடி வரை வசூலித்து பத்தாம் இடத்தை பிடித்துள்ளது.

கோப்ரா: விக்ரமின் நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த திரைப்படம் வெளியானதற்கு பிறகு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் வசூல் நிலை சிறிது மந்தமாக தான் இருந்தது. இருப்பினும் இந்த படம் முதல் நாளிலேயே 9.28 கோடி வரை வசூலித்து ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது.

Also read:பேங்க் ராபரி மட்டும் துணிவு படத்தின் கதை இல்ல.. தரமான பிரச்சனையை துணிந்து கையில் எடுத்த வினோத்

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் 9.47 கோடி வசூலித்து எட்டாம் இடத்தை பிடித்துள்ளது.

திருச்சிற்றம்பலம்: பல தோல்விகளுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளில் 9.52 கோடி வரை வசூலித்து ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.

ஆர்ஆர்ஆர்: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இப்படம் முதல் நாளிலேயே 12.73 கோடி வரை வசூலித்து ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன்: சூர்யாவின் நடிப்பில் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை மையப்படுத்தி வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல லாபம் பார்த்தது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் மட்டுமே 15.21 கோடி வரை வசூலித்து ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Also read:வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

பொன்னியின் செல்வன்: தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு நல்ல லாபம் பெற்ற நிலையில் முதல் நாள் மட்டுமே 21.21 கோடி ரூபாய் வரை வசூல் ஆகி இருக்கிறது. இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் தற்போது நான்காம் இடத்தில் இருக்கிறது.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் வரலாறு காணாத அளவிற்கு வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் பல படங்களின் சாதனையை இது முறியடித்தது. மேலும் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 20.61 கோடி ரூபாய் ஆகும். அந்த வகையில் இப்படம் தற்போது மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

பீஸ்ட்: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் கலகையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் முதல் நாளிலேயே 26.40 கோடி வரை வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

வலிமை: எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கொரோனா ஊரடங்கால் தள்ளி போடப்பட்ட இந்து திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அந்த வகையில் இப்படம் முதல் நாளிலேயே 36.17 கோடி வரை வசூலுத்து சிறந்த ஓப்பனிங் பெற்ற திரைப்படமாக முதல் இடத்தில் இருக்கிறது.

Also read:டேய் நீ பாண்டிய நாடா? இல்ல சோழ நாடா? அனல் பறக்கும் பொன்னியின் செல்வன் மீம்ஸ்கள்

Trending News