சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

2022-ல் வெளிவந்த உடனே ட்ரெண்டான 10 பாடல்கள்.. விஜய்க்கு டஃப் கொடுத்த சிம்பு

2022ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களை காட்டிலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் வழக்கம்போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் கவர்ந்துள்ளது. அப்படி பலரை கவர்ந்து அடிக்கடி முணுமுணுக்க வைத்த டாப் 10 பாடல்கள் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

அரபிக் குத்து: விஜயின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 320 மில்லியன் பார்வையாளர்களின் டாப் 10 லிஸ்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடினார்கள். பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

மல்லிப்பூ: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ என்ற பாடலை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பாடலுக்கு தாமரை வரிகள் எழுத, மதுஸ்ரீ பாடி சுமார் 53 மில்லியன் பார்வையாளர்களை கவனத்தைப் பெற்று டாப் லிஸ்டில் 2ம் இடத்தை பெற்று இருக்கிறது.

Also Read: எதுவும் செட் ஆகாமல் தவிக்கும் தளபதி.. இங்கிலாந்து, லண்டன் சென்றும் பிரயோஜனம் இல்லை

மேகம் கருக்காதா: இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மேகம் கருக்காதா பாடல் மட்டுமல்ல நடன காட்சிகள் அனைத்தும் பார்ப்போரை கண் குளிர வைத்தது. டாப் லிஸ்டில் 3-வது இடம் பிடித்திருக்கும் இந்தப் பாடலை தனுஷ் எழுதிப் பாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தல பத்தல: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் தான் டாப் லிஸ்டிங் 4-ம் இடம் பிடித்திருக்கிறது. இந்த பாடலை கமல் எழுதி பாடியது கூடுதல் சிறப்பு.

நாட்டுக்குத்து: ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டுக்குத்து பாடல் தான் இந்த வருடம் வெளியான சிறந்த பாடல்களின் லிஸ்டில் 5ம் இடம் பிடித்திருக்கிறது.

Also Read: டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

பொன்னி நதி: மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து இந்த வருடம் ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்தனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் ரசிகர்களை ரசிக்க வைத்ததுடன் டாப் லிஸ்டில் 6-ம் இடத்தையும் பெற்றிருக்கிறது.

இதைத்தொடர்ந்து 7-வது இடம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற ‘டூ டூ டூ’ பாடலுக்கும், 8-வது இடம் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இடம்பெற்ற ‘ஜலபுல ஜங்’ பாடலுக்கும் , 9-வது இடம் வலிமை படத்தின் ‘நாங்க வேறமாறி’ பாடலுக்கும், 10-வது இடம் தல அஜித்தின் வலிமை படத்தின் ‘சும்மா சுர்ருனு’ பாடலுக்கும் கிடைத்துள்ளது.

Also Read: கிளீன் சேவ் செய்து அடுத்த படத்திற்கு தயாரான அஜித்.. துணிவு கெட்டப் இனிமே ஸ்கிரீன்ல தான்

இவ்வாறு இந்த வருடம் வெளியான டாப் 10 சிறந்த பாடல்களில் முதல் இடத்தைப் பிடித்த தளபதி விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு சிம்புவின் மல்லிப்பூ பாடல் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலும் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Trending News