ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சினிமாவால் ஏற்படும் கஷ்டம்.. புறா போல் தூது விட்ட ரகுல் பிரீத் சிங்

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் க்யூட்டான நடிகை என பெயர் வாங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது கமலஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

32 வயதுடைய நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு, இந்தி, கன்னட தமிழ் படங்களிலும் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்.ஜி.கே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர், செம க்யூட்டான நடிகை என பெயர் வாங்கியவர்.

Also Read: போதைப்பொருளும்.. ரகுல் ப்ரீத் சிங் கதையும்!

இவர் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திரைத்துறையில் பட்ட கஷ்டங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய ஆகவேண்டும் என்றும் உருக்கமாக பேசியிருக்கிறார்

ஒரு படம் உருவாக்குவதற்காக லைட்மேன், கேமராமேன், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத் துறையில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை உழைக்கின்றனர்.

Also Read: ரொமான்ஸ் பண்ண அவர்தான் வேண்டும்.. சுறா மீனுக்கே ரகுல் பிரீத்தி சிங் விரிக்கும் வலை

இதனால் அந்தப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பிற்காகயாவது சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் வருகிறது. இப்படி சினிமாவில் படும் கஷ்டங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவற்றை கூறுவதாகவும் ரகுல் பிரீத் சிங் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய படங்கள் தியேட்டரில் வெளியிடுவதை தான் விரும்புவதாகவும், திகில் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்துக் கூடியவிரைவில் திகில் படத்தில் நடிப்பேன் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

Also Read: பாலிவுட் நடிகரை வளைத்து போட்ட ரகுல் பிரீத் சிங்.. பர்த்டேக்கு வெளிவந்த சர்ப்ரைஸ் புகைப்படம்

Trending News