சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வளர்த்துவிட்ட குருவை பதம் பார்த்த 2 ஹீரோக்கள்.. வாய்ப்பு கொடுக்காமல் கழட்டிவிட்ட மணிரத்தினம்

மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனால் பல நடிகர், நடிகைகளுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Also Read :பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மற்றும் மாதவனுக்கும் வாய்ப்பு கொடுக்கும் திட்டம் தீட்டி இருந்தார் மணிரத்னம். ஏனென்றால் இந்த 2 நடிகர்களையும் வளர்த்து விட்டவர் மணிரத்னம் தான். இவர் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அரவிந்த்சாமி.

அதேபோல் மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார் மாதவன். இந்நிலையில் இந்த இரு நடிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மணிரத்னம் இருந்தார். ஆனால் அதன் பின்பு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் நடிகர்களை தேர்வு செய்துவிட்டார்.

Also Read :வெளியில் தெரியாமல் வெச்சி செய்யும் அரவிந்த்சாமி.. அடேங்கப்பா பாஸ்கர் ஒரு ராஸ்கல் தான்

இதனால் இவர்கள் மணிரத்னம் மீது அதிருப்தியில் இருந்தனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்காக அரவிந்த்சாமி மற்றும் மாதவனை மணிரத்னம் அழைத்துள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் இவர்கள் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. வளர்த்துவிட்ட குருவையே பதம் பார்த்து உள்ளார்கள் என இவர்களைப் பற்றி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

Also Read :சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

Trending News