சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் எப்போதுமே சில கண்டிஷன்கள் வைத்துள்ளார். அதாவது தனக்கு பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் ஒரு தோல்வி படத்தைக் கொடுத்தால் அந்த இயக்குனரிடம் மீண்டும் பணிபுரியமாட்டார். மேலும் தன்னுடைய படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.
அதனால்தான் சந்திரமுகி 2 படத்தில் கூட ரஜினி நடிக்கவில்லை. தற்போது லாரன்ஸ் அந்த படத்தில் நடித்து வருகிறார். இதையெல்லாம் விட முக்கிய கண்டிஷன் ஒன்று சூப்பர்ஸ்டார் படத்தில் உள்ளது. அதாவது தனக்கு இணையான அல்லது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள நடிகர்களை ரஜினி தனது படங்களில் சேர்க்க மாட்டார்.
காலா படத்தில் கூட தனுஷ் 5 காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று தனது மனைவி ஐஸ்வர்யாவை தூதுவிட்டு ரஜினியிடம் கேட்க சொல்லியிருந்தார். அதற்கு ரஜினி மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதாவது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிவகார்த்திகேயனுக்கு இருந்துள்ளது. இதனால் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் ரஜினியிடம் சிபாரிசு செய்துள்ளார்.
ஆனால் இதற்கும் திட்டவட்டமாக ரஜினியின் மறுத்துவிட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் இது ரஜினி படமாக மட்டும் தான் இருக்க வேண்டுமென நெல்சனுக்கு கட்டளையிட்டுள்ளார். சொந்த மருமகனுக்கு வாய்ப்பு கொடுக்காத ரஜினி மற்றொரு நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவாரா என்ன.
இதன் பின்புதான் இப்படத்தில் வசந்த் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தன்னுடைய நெருங்கிய நண்பரின் மகன் என்பதால் சிவராஜ் குமாரை இப்படத்தில் நடிக்க வைக்க ரஜினி சம்மதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் இல்லாதவர் என்பதால் கூட ரஜினி சம்மதித்து இருக்கலாம்.