Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

2027 அஜித் ஆண்டாக மாறப்போகுது! பொங்கல் முதல் தீபாவளி வரை 3 படங்கள்!

2027 அஜித் ஆண்டாக மாறப்போகுது! பொங்கல் முதல் தீபாவளி வரை 3 படங்கள்!

2027-ஆம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனநீண்ட நாட்களாக அவரது படங்கள் திரைக்கு வராத நிலையில், இந்த அறிவிப்புகள் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.


வழக்கமான படமாக இல்லாமல், அஜித் குமாரின் சர்வதேச கார் பந்தயப் பயணத்தையும், அதற்காக அவர் எதிர்கொண்ட சவால்களையும் விவரிக்கும் படமாக உருவாகியுள்ளது ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


மேலும், அஜித்தின் குடும்பத்தினரான ஷாலினி, அனௌஷ்கா, ஆத்விக் ஆகியோருடன் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
முதலில் நவம்பர் 19-ஆம் தேதி ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஷாலினியின் விருப்பத்திற்கிணங்க தற்போது 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2027 அன்று தியேட்டர்களில் வெளியாக உள்ளது.


‘குட் பேட் அக்லி’படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு,அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் படம் ‘டேர் டெவில்’
இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தனது பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், பார்த்திபன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


2027-ஆம் ஆண்டு கோடை விடுமுறையை இலக்காகக் கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘டேர் டெவில்’ படத்தை முடித்த கையோடு, 2027 தீபாவளிக்கு மற்றொரு படத்தை வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளதாகத் திரைத்துறையில் பேசப்படுகிறது.


அஜித்தின் 65-வது படமான ‘ஏகே 65’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா அல்லது வெங்கட் பிரபு ஆகியோரில் யாரேனும் ஒருவர் இயக்கக்கூடும் எனக் கோலிவுட்டில் பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.
இதனால், 2027-ஆம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.