சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்த வருட தொடக்கத்தில் வெளியான 35 படங்களுக்கு இந்த கெதியா.? மண்ணைக் கவ்விய 3 பெரிய ஹீரோக்கள்

Tamil Top Actors: 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இரண்டு மாதத்தில் இதுவரை தமிழில் மட்டும் 35 படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கு இந்த கெதியா! என தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட மூன்று டாப் ஹீரோக்களின் படங்களை ரசிகர்கள் கொண்டாடாமலே போய்விட்டனர்.

இந்த வருட ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் 30லிருந்து 35 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஆனால் மக்கள் ரசிக்கக்கூடிய ஒரு தரமான படம் கூட இல்லை. இந்த வருட பொங்கலுக்கு பல போராட்டங்களின் மத்தியில் சிவகார்த்திகேயனின் அயலான் படமும், தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானது. ஆனால் அயலான் கூட பரவாயில்லை, ஆனா கேப்டன் மில்லர் ரொம்பவே வைலன்ஸ் ஆக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் சுத்தமாகவே வெறுத்துப் போனார்கள்.

அதேபோல் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ‘மொய்தீன் பாய்’ என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் என்ன தான் கிரிக்கெட்டை மையமாக வைத்து, மத நல்லிணக்கத்தை பற்றி தொண்டை கிழிய கத்தினாலும் அந்த படம் யாருக்குமே பிடிக்கல.

Also Read: 12 ஏக்கர் நிலத்தை பதிவு செய்து தியாகம் செய்த ரஜினி.. அரசியல் கட்சிகளை வாயடைக்க வைத்த சம்பவம்

கொண்டாடாமல் போன 3 பெரிய நடிகர்கள் படம்

இந்த வருடத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களில் எல்லாமே கெட்ட வார்த்தைகளும் வன்முறைகளும் ரத்தகளரியுமாய் தான் இருந்தது. இதுவே இந்த படங்கள் அனைத்தும் வசூலில் மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணமாகிவிட்டது. இப்போதெல்லாம் இது போன்ற படங்கள் தான் ட்ரெண்டிங் என எல்லா இயக்குனர்களும் இவற்றை தான் கையில் எடுக்கின்றனர்.

அதிலும் உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய் இவர்களுடன் இப்போது அசுர வளர்ச்சி அடைந்த இளம் நடிகரான சிவகார்த்திகேயனும் அமரன் படத்தில் கெட்ட வார்த்தை பேசி இருக்கிறார். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல! தமிழ் படங்களில் தான் இப்படி ஒரு சீர்கேடு நடக்கிறது, ஆனா அக்கட தேசமான மலையாளத்தில் அப்படி கிடையாது.

நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து டீசண்டா படம் எடுத்து செம ஹிட் அடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சில தினத்திலேயே 50 கோடியை அசால்டாக தட்டி தூக்கி இருக்கிறது. இது போன்ற படங்களை பார்த்தாவது இனி தமிழ் சினிமா திருந்துமானு பார்க்கலாம்.

Also Read: அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் 5 மிரட்டலான படங்கள்.. வாடிவாசலுக்கு பின் சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் கூட்டணி

Trending News