புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோல்வியை பார்க்காத 3 இயக்குனர்கள்.. காப்பி அடிச்சு பக்காவாக பாஸாண அட்லீ!

சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை மட்டுமே கொடுப்பது சாதாரண விஷயமல்ல. தற்போது டாப் நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களும் தோல்வி படங்களை கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் தங்களது கதை, இயக்கம் ஆகியவற்றில் அதித கவனம் செலுத்தி தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தோல்வியே சந்திக்காத இயக்குனர்கள் என்ற பெயரையும் பெற்றுள்ளனர். இதனால் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த இயக்குனர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். அவ்வாறு இதுவரை தோல்வி படமே கொடுக்காத 3 இயக்குனர்களை பார்க்கலாம்.

வெற்றிமாறன் : தனுஷின் ஆஸ்தான இயக்குனர் என்றே வெற்றிமாறன் சொல்லலாம். அதாவது பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுசுக்கு பல வெற்றி படங்களை வெற்றிமாறன் கொடுத்துள்ளார். மேலும் தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் : மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். ஹீரோயின், பாடல் என எதுவுமே இல்லாத இப்படம் திரைக்கதை மூலமாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் தற்போது உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விக்ரம் படமும் வசூலில் வேட்டையாடி வருகிறது. அடுத்ததாக லோகேஷ் விஜய்யின் 67 வது படத்தை இயக்கயுள்ளார்.

அட்லீ : ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அட்லி அறிமுகமானார். முதல் படத்திலேயே பல விமர்சனங்கள் வந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி மாறினார். தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை அட்லி கொடுத்தார்.

தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி கேலி, கிண்டலுக்கு உள்ளானது. அதாவது தொடர்ந்து அட்லியின் படங்கள் பல படங்களின் காப்பி ஆக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் அட்லி தற்போது வரை தோல்வி படமே கொடுக்காமல் வெற்றி இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.

Trending News