Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல

ரிலீசுக்கு தயாரான ஐஸ்வர்யா ராஜேஷின் 4 படங்கள்.. நயன்தாரா இல்லாத இடத்தை நிரப்புறாங்க போல

சிறிய கேரக்டராக இருந்தாலும் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கும், கதைக் களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், 4 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தற்போது கோலிவுட்டில் அதிக படங்களை […]

சிறிய கேரக்டராக இருந்தாலும் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கும், கதைக் களத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், 4 படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

தற்போது கோலிவுட்டில் அதிக படங்களை நடித்து வரும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், படங்களில் மட்டுமல்ல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூழல் வெப் சீரிஸ் அனைவரது கவனத்தையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த’ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமும் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது..

இதைத்தொடர்ந்து இரண்டாவதாக விஷ்ணு விஷால் உடன் ‘மோகன்தாஸ்’ என்ற படமும், அதைத்தொடர்ந்து இயக்கத்தில் கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கிறது.

இவற்றைப் போலவே ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் ஷூட்டிங்கும் தற்போது நிறைவடைந்து அந்தப் படமும் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. மேலும் அர்ஜுனுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘தீயவர் குறைகள் நடுங்க’ என்ற படமும் முழுமையாக தயாராகி ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த நான்கு படங்களும் தீபாவளியை அடுத்து ரிலீஸ் ஆக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நான்கு படங்களையும் முடித்த கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.