Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

முதல் முறையாக மிஷ்கினுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்! ரிலீஸுக்குத் தயார்

முதல் முறையாக மிஷ்கினுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்! ரிலீஸுக்குத் தயார்

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சத்தியவான் சாவித்திரி. முதல் முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளதால், இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வழக்கறிஞர்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பீரவின் S. விஜய் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் 1.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும், தீபாவளிக்கு வெளியான இப்படத்தின் ஸ்பெஷல் புரோமோ 3,40,000 பார்வைகளைப் பெற்றுள்ளதுடன் இணையத்திலும் ட்ரெண்டாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.