Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

கர படத்திற்குப் பிறகு தனுஷின் அடுத்தடுத்த படங்கள்.. வரிசைகட்டும் மெகா அப்டேட்ஸ்!

கர படத்திற்குப் பிறகு தனுஷின் அடுத்தடுத்த படங்கள்.. வரிசைகட்டும் மெகா அப்டேட்ஸ்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஓம்’ படத்தில் மெகா ஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D56 படத்திற்கு முதல்முறையாக சாய் அபியங்கர் இசையமைக்கிறார்.

இதற்கிடையே, சிறுத்தை சிவா இயக்கத்திலும் தனுஷ் முதல்முறையாக இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வெற்றிமாறனுடன் தனுஷ் ஐந்தாவது முறையாக இணையும் படத்திற்கு ‘தமிழ்முருகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘கலாம்’ என்ற படமும் உருவாக உள்ளது. அதுமட்டுமின்றி, ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும், பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இளையராஜாவின் பயோபிக் படத்திற்கான பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், தனது அண்ணன் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து ‘புதுப்பேட்டை 2’ அல்லது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிப்பதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், ‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனுடன் பி.எஸ். மித்ரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்புகளால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் இந்தப் பட அப்டேட்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.