Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

எதிர்பாராத சர்ப்ரைஸ்: கொண்டாட்டத்தில் சூர்யா- ஜோதிகா ரசிகர்கள்!

எதிர்பாராத சர்ப்ரைஸ்: கொண்டாட்டத்தில் சூர்யா- ஜோதிகா ரசிகர்கள்!

திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அழகான ஜோடியாக வலம் வரும் சூர்யா- ஜோதிகா தம்பதியினர் சமீபத்தில் தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடினர்.

இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூர்யாவின் ‘Scene’ படத்தில் ஜோதிகாவின் கேமியோ தோற்றம் ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இந்த ஜோடியின் திரை கெமிஸ்ட்ரியைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்களுக்கு, மீண்டும் இருவரையும் ஒரே திரையில் பார்ப்பது தனி மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜோதிகா.

அதேபோல், இனி வரும் படங்களிலும் சூர்யா- ஜோதிகா இருவரும் தொடர்ந்து இணைந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.