வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காதலர் தின ஸ்பெஷல்.. ரீ ரிலீஸ் செய்யப்படும் 4 படங்கள்

4 Movies to be Re-released on Valentine’s Day: உலகில் மிகவும் உன்னதமான விஷயம் என்றால் அது காதல் தான். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி இளசுகள் முதல் பெரியவர்கள் வரை காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் டானிக் கொடுக்கும் விதமாக நான்கு தரமான காதல் படங்களை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

பிரேமம்: ஜார்ஜ் டேவிட் ஆக நிவின்பாலியும், மலர் டீச்சராக சாய்பல்லவியும் நடித்த அற்புதமான காதல் திரைப்படம் தான் பிரேமம். தமிழிலும், மலையாளத்திலும் வெளியான இந்த படம் இப்ப வரை ரசிகர்களின் ஃபேவரிட் மூவிஸ் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. 4 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம், சுமார் 70 கோடி வரை வசூலை தட்டி தூக்கியது. இந்த படம் மூன்று வெவ்வேறு காலகட்ட காதலை பேசியது.

இதனால் 9 வருடத்திற்கு முன்பு கொண்டாடப்பட்ட இந்த படத்தை மறுபடியும் காதலர் தின ஸ்பெஷல் ஆக தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் பிப்ரவரி 1ம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதுமே காதலர்களின் ஸ்பெஷல் டே என்பதால், பிரேமம் படத்தை லவ்வர்ஸ் ஆர்வத்துடன் திரையரங்கில் சென்று பார்க்கின்றனர்.

விண்ணைத்தாண்டி வருவாயா: தரமான காதல் படங்களை கொடுத்து ரொமான்டிக் இயக்குனர் என பெயர் எடுத்த கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான அழகான காதல் திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்து பையனான கார்த்திக்கும், மலையாள கிறிஸ்தவ பொண்ணான ஜெஸ்ஸிக்கும் இடையே ஆன காதல் கதை தான் இந்த படத்தின் ஸ்டோரி.

இவர்களின் காதலால் அவர்களின் குடும்பங்களில் நிகழும் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் இருவரின் மனநிலையை, இதில் கௌதம் மேனன் அழகாக காட்டினார். என்னதான் இந்த படத்தில் கார்த்திக்- ஜெஸ்ஸி காதல் ஜோடி ஒன்று சேராவிட்டாலும், கார்த்திக் இந்த படத்தில் எடுக்கக்கூடிய மூவியில் காதலர்களை சேர்த்து வைத்து விடுவார். இந்த வருட காதலர் தின ஸ்பெஷல் ஆக விண்ணைத்தாண்டி வருவாயா படமும் பிப்ரவரி 14-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

Also Read: என்னது மீண்டும் மீண்டுமா.. கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டே செல்லும் விடுதலை 2 சூட்டிங்

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் நான்கு காதல் திரைப்படம்

96: டைம்லெஸ் கிளாசிக் படம் என்றாலே சினிமா பிரியர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வகையில் 96 படத்தில் ராம், ஜானுவின் காதல் கதை பார்வையாளர்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தில் ராம், ஜானுவின் அன்பும் காதலும் என்றும் ரசிகர்களின் நினைவுகளை விட்டு போகாது. இதில் ராம் தன்னுடைய பள்ளிப் பருவ காதலி ஜானுவின் நினைவாலேயே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் ஜானுவோ ராமின் நினைவுடன் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அவருடைய நினைப்பிலே வாழ்கிறார்.

இருப்பினும் விதி ராம்- ஜானு இருவரையும் ஒரு பள்ளியில் சந்திக்க வைக்கிறது. காதலிக்கு திருமணமான விஷயம் தெரிந்தும் ஒரு சதவீதம் கூட காதல் குறையாத ராமின் உன்னதமான காதலைத் திரையில் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும். இப்படிப்பட்ட அற்புதமான காதல் கதை லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் ஆக வரும் பிப்ரவரி 14-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. டி.எம். சுந்தரம் பிக்சர்ஸ் 96 படத்தினை தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் அதிக திரைகளில் வெளியிடுகிறார்கள்.

சீதாராமன்: சொந்த பந்தம் யாருமே இல்லாத அனாதையாக இருக்கும் ராணுவ வீரர் ராமுக்கு, சீதா மகாலட்சுமி என்ற பெயரில் கடிதம் வருகிறது. தன்னை ராமின் மனைவி என்ற சொல்லிக் கொண்டது மட்டுமல்லாமல், அந்த முகவரி இல்லாத கடிதத்தின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கிறார் ராம். வீட்டை மீறி திருமணம் செய்கின்றனர். இந்நிலையில் பயங்கரவாதியை கொல்வதற்கு நாட்டின் எல்லை தாண்டி ராம் செல்கிறார்.

அவர் திரும்பி வந்தாரா? சீதா யார்? என்ற கேள்விகளை எல்லாம் ஃப்ளாஷ்பேக்கில் விவரித்து, காதல் மனைவிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் ராம் எழுதிய கடிதத்தை கொண்டுவரும் அஃப்ரீத் யார் என்பதை சுவாரசியமாக சொல்கிறது சீதாராமன் திரைப்படம். ஒரு இனிமையான காதல் ஸ்டோரியை ராணுவ பின்னணியில் சுவாரசியமாக சொருகி உள்ளனர். இந்தப் படம் பலரது நெஞ்சத்தை உருக்கியது. காதலை வெறுப்பவர்கள் கூட இந்த படத்தை பார்த்ததும் காதல் இவ்வளவு உன்னதமானதா! என்று வியப்பார்கள். இப்பேர்ப்பட்ட படத்தையும் இந்த வருட காதல் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி மறுபடியும் ரிலீஸ் செய்கின்றனர்.

Also Read: 2024 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள்.. போட்டி போடும் டாப் ஹீரோக்கள்

Trending News