திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரிஷாவிற்காக குரல் கொடுக்காத 4 பேர்.. அரசியல் கட்சி தொடங்கியும் பதுங்கி இருக்கும் விஜய்

4 people who are not advocating for Trisha: நல்ல பெயரை சம்பாதிப்பது தான் மிகப்பெரிய கடினம், ஆனால் கெட்ட பெயர் எடுப்பதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. இதற்கு ஏற்ற மாதிரி திரிஷாவின் நிலைமை தற்போது இருக்கிறது. இப்பொழுது சோசியல் மீடியாவை திறந்து பார்த்தாலே த்ரிஷாவின் பெயர் தான் டேமேஜ் ஆகி கொண்டே வருகிறது. அதாவது திரிஷாவின் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் நேற்று விஸ்வரூபமாக வெடித்தது.

இதனைத் தொடர்ந்து த்ரிஷா அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இது போன்ற ஆட்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அத்துடன் இதை சும்மா விடமாட்டேன் சட்ட ரீதியாக இதற்கு கண்டனம் தெரிவிப்பேன் என்று பதிலடி கூறியிருந்தார். மேலும் த்ரிஷாவுக்கு சப்போர்ட்டாக பல பிரபலங்கள் போர் கொடியை தூக்கி வருகிறார்கள்.

ஆனால் இன்னும் சில பேர் த்ரிஷாவுக்காக வாயை திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய், தன்னுடன் நடித்த சக நடிகைக்காகவும் ஆதரவு கொடுக்கவில்லை. அத்துடன் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் இறங்கி மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த ஒரு அரசியல்வாதியாகவும் விஜய் சப்போர்ட் செய்யாமல் இருந்து வருகிறார்.

Also read: பக்கா அரசியல்வாதியா யோசிச்ச விஜய்.. கடுப்பான மக்கள்! பிளான்ன சேஞ்ச் பண்ண சொன்ன தளபதி

ஒருவேளை விஜய் வெளியே தெரியாமல் த்ரிஷாவுக்கு சைலண்டாக இருந்து சப்போர்ட் பண்ணி வருவாருன்னு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் இது அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்த பொழுது ஓகே தான். ஆனால் தற்போது அரசியல்வாதியாகவும் பயணத்தை தொடங்க நினைக்கும் விஜய் இப்படி செய்தால் எப்படி இவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும்.

அடுத்ததாக கமல், சினிமாவில் எல்லாத்தையும் கற்றுத் தெரிந்த என்சைக்ளோபீடியாகவும், மூத்த நடிகராகவும் இருந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் மூலம் நல்லது செய்ய நினைக்கும் ஒரு அரசியல்வாதியாக கூட இருந்தும் திரிஷாவிற்காக நியாயம் கேட்காமல் இருப்பது எப்படி சரியாக இருக்கும்.

இவர்களைத் தொடர்ந்து சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் எனக்கு என்ன வந்துச்சு என்று த்ரிஷாவின் சர்ச்சையான விஷயத்தை வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்கள். அத்துடன் ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலே பெண்ணுக்கு எதிராக நீங்கள் எப்படி இந்த மாதிரி வார்த்தையை பேசலாம் என்று எதற்கெடுத்தாலும் போர்க்கொடி தூக்கி வரும் மகளிர் அமைப்புகளும் இந்த ஒரு விஷயத்தில் திரிஷாவிற்காக வரவில்லை.

Also read: விஜய் அரசியலால் சிக்கலில் மாட்டப் போகும் அஜித்தின் கேரியர்.. எல்லாத்தையும் ஒரு கை பாக்க தயாரான தளபதி

Trending News