திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சின்னப் பையனுக்கு ஜோடியான 4 மூத்த நடிகைகள்.. பழைய காதலியை வெறுப்பேற்றிய சிம்பு

அண்மையில் வெளிவந்த படமான பத்து தல சிம்புவிற்கு ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் இவர் கமலின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார். தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர். இவரோடு ஜோடி சேர்ந்த அந்த 4 மூத்த நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read:சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

சோனியா அகர்வால்: 2004ல் வெளிவந்த கோவில் படத்தில் சிம்பு மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் அம்சமாக இருக்கும். ஆனாலும் தன்னைவிட ஒரு வயது அதிகமானவரான சோனியா உடன் இணைந்து நடித்த சிம்புவுக்கு இப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

ஜோதிகா: ஜோதிகாவின் தீவிர ரசிகரான சிம்பு இவருடன் இணைந்து சரவணா, மன்மதன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் 2004ல் வெளிவந்த மன்மதன் படம் சூப்பர் ஹிட் பெற்றது. மைதிலி ஆக வரும் ஜோதிகா இப்படத்தில் நடித்த சிம்புவை விட நான்கு வயது மூத்தவர் என்பது தெரியாத அளவிற்கு இவர்களின் ஜோடி பொருத்தம் அமைந்திருக்கும். மேலும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தந்தது.

Also Read:இயக்குனரை ஏமாற்றிய சிம்புவின் குடும்பம்.. நடுரோட்டுக்கு வந்த டைரக்டர்

ரீமா சென்: 2006ல் வெளிவந்த வல்லவன் படத்தில் ரீமாசென் தன்னைவிட ஒரு வயது சின்ன பையனான சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் சிம்பு ரீமாசென்னை கலாய்ப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கும். மேலும் ரீமாசென் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னைவிட ஒரு வயது அதிகமான சிம்புவுடன் நட்புக் கொண்டு காதலித்து வந்தார். சில பல கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன்பின் தனுஷை மணந்து கொண்டார் ஐஸ்வர்யா.

Also Read:ஜோதிகாவை காதலித்து வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள்.. ஜோவை விட்டு வைக்காத அந்த வாரிசு நடிகர்

இதுபோன்ற காரணத்தால் தான் சிம்பு மூத்த நடிகைகளோடு இணைந்தும் படத்தில் அவர்களை கலாய்ப்பது போன்று நடித்திருப்பார். ஆனாலும் இதை பொருட்படுத்தாத ஐஸ்வர்யா தன் அடுத்த இயக்கத்தில் வர இருக்கும் படத்தில் சிம்புவை நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருந்து வருகிறாராம்.

 

 

Trending News