Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என்ன கண்மணி இதெல்லாம்.. 45 வயதில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி தரிசனம், வைரல் போஸ்டர்

என்ன கண்மணி இதெல்லாம்.. 45 வயதில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி தரிசனம், வைரல் போஸ்டர்

Manju Warrier’s Viral Poster: மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு என நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் […]

Manju Warrier’s Viral Poster: மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு என நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் நடித்து வரும் இவர் மலையாளத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் அவர் நடித்துள்ள ஃபுட்டேஜ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன கண்மணி இதெல்லாம்? மஞ்சு சேச்சியா இது? நம்பவே முடியலையே என ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி வருகின்றனர்.

அந்த அளவுக்கு அந்த போட்டோ தற்போது சர்ச்சையாக பேசப்படும் அளவுக்கு இருக்கிறது. அதில் மஞ்சு வாரியர் ஹீரோவின் மடியில் அமர்ந்து அவரை கட்டிப்பிடித்தது போல் இருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 45 வயது ஆகும் மஞ்சு வாரியர் பல தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் இதுவும் ஒன்று என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள மஞ்சு ஒவ்வொரு கதவுக்கும் பின்னால் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

45 வயதில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி தரிசனம்

இந்த போஸ்டர் பலரையும் மிரள செய்தாலும் ஃபுட்டேஜ் படத்தில் காயத்ரி அசோக் என்ற மற்றொரு ஹீரோயினும் இருக்கிறார். அதனால் இது மஞ்சு சேச்சி கிடையாது. காயத்ரி அசோக் தான் எனவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.