கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சிலர் நட்புக்காக ஒரு பைசா கூட காசு வாங்காமல் படத்தை நடித்துக் கொடுத்திருக்கின்றனர். அதிலும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்காக கேப்டன் விஜயகாந்த் செய்த கைமாறு பலரையும் வியக்க வைத்தது.
அஜித்: ஸ்ரீதேவியின் உள்ள மரியாதை நிமித்தமாக அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் அஜித் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். இதை ஸ்ரீதேவி பல பேட்டியில் பெருமையாக கூறியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் தான் 26 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவி ரீ என்ட்ரி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: 85 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவா, வாரிசா.? ஆட்டநாயகனை உறுதி செய்த 25வது நாள்
வடிவேலு: பல பிரச்சினைகளுக்குப் பிறகு சினிமாவில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் வடிவேலுவின் நட்புக்காக ஒரு பாடலுக்கு பிரபுதேவா பணம் வாங்காமல் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இதற்கு வடிவேலு படத்தில் நான் இல்லாமல் எப்படி என்று பெருமையாக பேசி இருக்கிறார்.
சிம்பு: இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகி இப்போது வரை திரையரங்கில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் தீ தளபதி என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பாடலை சிம்பு அண்ணன் விஜய்காக பணம் வாங்காமல் பாடி ஹிட் கொடுத்துள்ளார்.
Also Read: லியோ மட்டுமல்ல கைதி 2 ரிலீஸ் தேதியையும் முடிவு செய்த லோகேஷ்.. மீண்டும் மிரட்ட வரும் டில்லி
சூர்யா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் கமலுக்காக கடைசி ஒரு ஆறு நிமிடம் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து படத்தை வேறு மாதிரி வெற்றி அடைய வைத்தார். இதில் அவர் பணம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்: விஜய் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அவருடன் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்து படத்தை வெற்றி பெற, தமது குரு எஸ் ஏ சந்திரசேகருக்கு செய்யும் கடமையாக பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.
Also Read: ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்.. 46 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்
இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் நட்புக்காக 10 பைசா கூட வாங்காமல் படத்தில் நடித்து கொடுத்திருக்கின்றனர். அதிலும் கேப்டன் செய்த காரியம் இப்போது வரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.